Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை! டிரம்புக்கு பாராட்டு!

கொரோனா மதிப்பு உலக நாடுகளில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய நாடாக அமெரிக்கா இன்றளவும் நிகழ்ந்து வருகிறது. அங்கு இதுவரையில் 5 கோடியே 12 லட்சத்து 72 ஆயிரத்து 261 பேர் இந்த நோய் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். 8 லட்சத்து 10 ஆயிரத்து 45 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

தற்போது புதிய வகை நோய்த்தொற்றும் அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வருகிறது தற்சமயம் அங்கே கொரோனா கண்டறியப்படுகின்ற 73 சதவீதத்திற்கு அதிகமானோருக்கு புதிய வகை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இது அந்த நாட்டு மக்களை கலக்கமடைய செய்திருக்கிறது. ஆனால் அங்கே இன்னும் தடுப்பூசி போடுவதில் படைவீரர்கள் கூட தயக்கம் காட்டி வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால் நீங்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் நோய்தொற்றுக்கு ஆளானால் உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், நண்பர்கள், உட்பட மற்றவர்களுக்கு பரப்புவீர்கள்.

நாம் எல்லோரும் புதிய வகை நோய் தொற்று தொடர்பாக கவலை கொள்ளத்தான் வேண்டும். ஆனால் பதற்றமடைய தேவையில்லை ,ஆனால் தடுப்பூசி போடாத சூழ்நிலையில், நோய்த்தொற்று ஏற்பட்டால் மருத்துவமனையில் சேர்க்கும் நிலை ஏற்படு,ம் மரணமடையும் வாய்ப்பு இருக்கிறது என கூறியிருக்கிறார்.

முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் தவணைத் தடுப்பூசியும் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்0 இது நோய் தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாப்பு வழங்குகிறது. புதிய வகை நோய்த்தொற்றை பொறுத்தவரையில் அது எளிதாக பரவுகிறது. முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மீண்டும் நோய்த் தொற்று பாதிப்பு உண்டாகிறது என தெரிவித்திருக்கிறார்.

தடுப்பூசி போட்டவர்கள் நோய்தொற்று பாதிப்புக்கு ஆளாக நேரிட்டாலும், அவர்கள் தீவிரமான நோயிலிருந்தும், மரணத்திலிருந்தும், பாதுகாக்கப்பட்டவர்கள் என்ற நிலைக்கு வந்துவிடுகிறார்கள். ஆகவே எல்லோரும் கவனத்துடன் இருக்க வேண்டும் உங்கள் தேர்வு வாழ்வுக்கும், மரணத்திற்கும், இடையே என வித்தியாசமாக இருக்கலாம் என்று அவர் கூறியிருக்கிறார்.

அதோடு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப் அவர்களுக்கு தன்னுடைய உரையின்போது பாராட்டு தெரிவித்திருப்பது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

நோய்தொற்று பரவலுக்கு மிக விரைவாக தடுப்பூசி கண்டுபிடித்து பொதுமக்களுக்கு செலுத்த தொடங்கியதற்காக அவர் முன்னாள் அதிபர் டிரம்ப் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கும் போது நான் தெளிவாக தெரிவிக்கின்றேன் நோய் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பெற்ற முதல் நாடுகளில் அமெரிக்காவும், ஒன்று இதற்காக நான் முந்தைய நிர்வாகத்திற்கும் , அறிவியல் சமூகத்தினருக்கும், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Exit mobile version