யுபிஐ மூலம் ஏடிஎம்மில் பணம் எடுப்பது மிகவும் சுலபம்!! முழு விவரம் இதோ!

0
86
#image_title

யுபிஐ மூலம் ஏடிஎம்மில் பணம் எடுப்பது மிகவும் சுலபம்!! முழு விவரம் இதோ!

ஏடிஎம்மில் பணம் எடுக்க டெபிட் கார்டு,ஓடிபி அடிப்படையிலான செயல் முறையை நாம் பயன்படுத்தி வருகிறோம்.இந்நிலையில் தற்பொழுது யுபிஐ செயலியின் உதவியுடனும் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான புதிய வசதி அறிமுகப்படுத்த பட்டுள்ளது.

முதன் முதலாக மும்பையில் யுபிஐ – ஏடிஎம் ஹிட்டாச்சி பேமண்ட் சர்வீசஸ் மூலம் ஒயிட் லேபிள் ஏடிஎம் அறிமுகப்படுத்தப்பட்டது.நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) உடன் இணைந்து இந்த வசதி கொண்டுவரப் பட்டுள்ளது.தற்பொழுது யுபிஐ ஏடிஎம்மில் பணம் எடுப்பது எப்படி என்பது குறித்த வீடியோவை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.BHIM செயலியில் மட்டுமே இந்த வசதி இயங்குகிறது.இனி வரும் நாட்களில் அனைத்து யுபிஐ செயலியிலும் இந்த வசதியை பயன்படுத்த முடியும் எனத் தெரிகிறது.

யுபிஐ ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் முறை:-

1.யுபிஐ கார்டுலெஸ் கேஷ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

2.இதனை தொடர்ந்து பயனாளர் எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்பது திரையில் வெளிப்படுகிறது.

3. பயனாளர் தனக்கு எவ்வளவு தொகை தேவை என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

4.இதன் பின்னர் அந்த திரையில் க்யூஆர் கோடு தோன்றும்.

4. பயனாளர் தங்கள் போனில் உள்ள யுபிஐ செயலி மூலம் அந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டும்.

5.பின்னர் பணம் எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.

6.இதனை தொடர்ந்து பயனாளர் தன்னுடைய யுபிஐ ரகசிய குறியீட்டு எண்ணை உள்ளிட வேண்டும்.

7.இறுதியாக பயனாளர் தேர்வு செய்த பணம் ஏடிஎம்மில் இருந்து வெளி வரும்.