Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீயின்றி நான் இல்லை! கொரோனாவல் குடும்பத்திற்கு ஏற்பட்ட கதி!!

கணவனுக்குக் கொரோனா தொற்று உறுதியானதால் மனமுடைந்த மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தர்மபுரி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கொரோனா பலரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு வருகிறது. முதல் அலையில் ஊரடங்கு அதிகமானதால் அனைவரும் பொருளாதாரங்களை இழந்து பரிதவித்தனர்.

 

இரண்டாவது அலையில் அனைவரும் நோய் தொற்றுக்கு ஆளாகி சொந்தங்களை பிரியமானவர்களை இழந்துவருகின்றனர். பலரும் தன் அன்புக்குரியவர்களை இழந்து வேதனையில் மூழ்கியுள்ளனர்.

 

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் திப்பம்பட்டி என்ற ஊரில் விவசாயி மூர்த்தி மற்றும் சிந்தாமணி ஆகிய தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

 

இந்நிலையில் மூர்த்திக்கு கடந்த சில நாட்களாக சளி இருமல் காய்ச்சல் இருந்து வந்துள்ளது. பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தர்மபுரி மருத்துவமனையில் மூர்த்தி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

கணவன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் மனைவி மிகவும் மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது மன வேதனை தாளாமல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சிந்தாமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

 

Exit mobile version