Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

100 நாள் திட்டத்தில் பள்ளிக் குழந்தைகள் வேலை செய்யும் அவலம்!. வெளிவரும் அதிர்ச்சி தகவல்!!

Woe to school children working in 100 day program!. Shocking information coming out!!

Woe to school children working in 100 day program!. Shocking information coming out!!

100 நாள் திட்டத்தில் பள்ளிக் குழந்தைகள் வேலை செய்யும் அவலம்!. வெளிவரும் அதிர்ச்சி தகவல்!!

குஜராத்தில் மகாத்மா காந்தி ஊடக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பள்ளி குழந்தைகளை பெயரை சேர்த்து வங்கி கணக்கு துவக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்தும் படி மத்திய அரசு உத்தரவிட்டது.

குஜராத் மாநிலம் தோட்டதேப்பூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரடங்கு வேலை உறுதி சட்டத்தின் கீழ் அங்கு பள்ளி செல்லும் நான்கு குழந்தைகளுக்கு அரசாங்க வேலை அட்டை வழங்கப்பட்டது.மேலும்  அவர்களின் பெயரில் வங்கி கணக்குகள் துவங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

அதன்படி  மாவட்ட நிர்வாகம் ஒப்பந்ததாரர், கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் குகர்தா கிராம கணக்காளர் ஆகியோருக்கு அரசாங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்ட வளர்ச்சி அதிகாரி கங்கா சிங் தெரிவிக்கையில், பள்ளிக் குழந்தைகளின் பெயரில் நான்கு வேலை அட்டை வழங்கியுள்ளதையும் வி.ஏ.ஓ லால்ஜி துங்கர்பில் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்விசாரணையில்  அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து பஞ்சாயத்து தலைவர் மற்றும் கணக்காளர் ஆகியோருக்கு மறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வெளியிடப்பட்ட நோட்டிஸ்க்கு  இருவரும் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். அவர்கள் உரிய விளக்கம் கொடுக்க தவறினால் அவர்களின் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பின் குகர்டா கிராமத்தின் தலைவர் கவுனாபெண் அம்பாலால் துங்கர் பிலின் கணவர் அம்பாலால் கூறுகையில்,எனது மனைவி படிப்பறிவற்றவள் அவர் வி.ஏ.ஓ தயாரித்த வேலைவாய்ப்பு பட்டியலில் அதை சரி பார்க்காமல் கையெழுத்திட்டுள்ளார். ஆவணங்களில் கையொப்பிடும்போது புகைப்படத்துடன் கூடிய வேலை அட்டைகளை காட்டவில்லை.

இது அவளது தவறல்ல மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளான  பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள்பெயரில் வழங்கப்பட்ட மூன்று வேலை அட்டைகள் மற்றும் பேங்க் பரோடாவின் தனக்லா கிராம கிளையில்  அல்லது வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டது.

இதைப் பற்றி மற்ற கிராமங்களிருந்து  தான் தெரிந்து கொண்டேன் என்றார். அதிகபட்சமாக பள்ளி குழந்தைகளுக்கு 25 முதல் 26 நாட்கள் வேலைக்காக அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது. இந்த பணத்தை வாங்கிய குழந்தைகள் தங்களுக்கு தேவையான நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வாங்கியுள்ளார்கள். இதில் குழந்தைகளின் பெற்றோர்களும் தொடர்பில் இருக்க அதிக வாய்ப்புள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.

Exit mobile version