தமிழகம் மற்றும் கேரளாவில் தாமரை மலரும்.. பிரபல நடிகையின் தாயார் அதிரடி..!!
நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்று நாடு முழுவதும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் அரசியல் தலைவர்கள் மற்றும் திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவர்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.
இந்நிலையில் தனது வாக்கை பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் தாயும் நடிகையுமான மேனகா கூறியதாவது, “கேரளாவில் நாடாளுமன்ற தேர்தலில் மாற்றம் இருந்தால் நன்றாக இருக்கும். கடந்த 15 ஆண்டுகள் திருவனந்தபுரத்தில் என்ன மாதிரியான ஆட்சி நடைபெறுகிறது என்பதை பார்த்தாலே தெரியும்.
எனவே புதிய ஆட்சி வந்தால் நன்றாக இருக்கும். அப்போதுதான் நாம் புதிய ஆட்சி குறித்து தெரிந்துகொள்ள முடியும். என்னை பொறுத்தவரை தாமரை மலர வேண்டும். அப்போதுதான் மாற்றம் வரும். ஏனெனில் கேரளாவில் இதுவரை பாஜக வரவில்லை. எல்டிஎப், யூடிஎப் தான் மாறி மாறி வருகிறார்கள். எனவே மாற்றம் வந்தால் நன்றாக இருக்கும்.
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் பாஜகவை புறக்கணிக்கிறார்கள். 10 முறை கீழே விழ்ந்தால் 11வது முறை எழுந்திருக்க மாட்டார்களா என்ன? எனவே பாஜக ஆட்சிக்கு வரும். கேரளாவில் தாமரை வெற்றி பெற நிறைய வாய்ப்புள்ளது” என கூறியுள்ளார். இதை கேட்டு பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.