இடுக்கி அருகே மதுவை பங்கு போடுவதில் உண்டான தகராறு காரணமாக, ஆண் நண்பரை வெட்டிக் கொன்ற பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
இடுக்கி மாவட்டம் தொடுபுழா நகரில் வசித்து வருபவர் அப்துல்சலாம் அதே போல அதே பகுதியில் வசித்து வருபவர் செலினா இவர்கள் இருவரும் நண்பர்கள்.
அப்துல்சலாமும் செலீனாவும் இரவு சமயத்தில் ஒன்றாக மது அருந்துவதும், தொடுபுழா பேருந்து நிலையத்தில் தங்குவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு 2 பேரும் மது அருந்தியதாக சொல்லப்படுகிறது.
அப்போது மதுவை பிரிப்பது குறித்து இருவருக்குமிடையே தகராறு உண்டானது. இதில் ஆத்திரமடைந்த செலினா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அப்துல்சலாமை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் அப்துல்சலாம் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்ததை அக்கம்பக்கத்தினர் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவலினடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அப்துல்சலாமை மீட்டு தொடுபுழா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தார்கள்.
இதனை தொடர்ந்து சரியாக பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அப்துல்சலாமை கத்தியால் குத்தியதை செலினா ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து அவரை காவல்துறையை சேர்ந்தவர்கள் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.