நடு வானில் பிறந்த குழந்தை!

0
162
Baby murdered by mother in Madhya Pradesh

பொதுவாக ஆரோக்கியமான கர்ப்ப காலத்தில், 36 வாரங்கள் வரை விமானத்தில் செல்வது பாதுகாப்பானது. அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான விமான நிறுவனங்கள் 36 வது வாரத்திற்கு முன் வரை கர்ப்பிணிப் பெண்களின் மூன்றாவது டிரைமிஸ்டெர் வரை உள்நாட்டில் பறக்க அனுமதிக்கின்றன. சில சர்வதேச விமானங்கள் 28 வாரங்களுக்குப் பிறகு பயணத்தை கட்டுப்படுத்துகின்றன.

காற்றழுத்தம் மற்றும்/அல்லது ஈரப்பதம் குறைவது உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைக்கோ தீங்கு விளைவிக்கும். ஆனால் விமானத்தில் செல்வதினால் கருச்சிதைவோ, அல்லது வேறு ஏதேனும் பாதிப்போ ஏற்படும் என்பதற்கு இது வரை எந்த ஆதாரமும் இல்லை.

லண்டனில் இருந்து கொச்சிக்கு செல்லும் வழியில் பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு நடு வானிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

33 வயது கர்ப்பினி ஒருவர் இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் இருந்து கேரளாவின் கொச்சிக்கு வந்து கொண்டிருந்த போது திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

அதன்பிறகு அவருக்கு விமானம் வந்து கொண்டிருக்கும் போதே நடுவானில் ஆண் குழந்தை பிறந்தது.

தாயும் சேயும் நலம் என்ற போதிலும் இருவரின் மருத்துவ பராமரிப்பிற்காக ஜெர்மனி நாட்டின் பிராங்க்பர்ட்டில் அவர்களை இறக்கி விட்டனர்.

விமான பயண விதியின் படி 32 வாரங்களுக்கு பிறகே ஒருவர் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்றால் மருத்துவ சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். ஆனால் இந்த பெண்ணுக்கு 29 வாரங்களே ஆன நிலையில் டிசம்பர் மாதம் பிறக்க வேண்டிய குழந்தை இரண்டு மாதங்களுக்கு முன்னரே பிறந்து விட்டது.