சென்னை: மாநகராட்சி ஒன்பதாவது வார்டு திருவொற்றியூர் குப்பம் அப்பர் நகரை சேர்ந்த 10 பேருக்கு நவம்பர் 29 இல் திடிரென வயிற்றுப்போக்கு மயக்கம் ஏற்பட்டது. மேலும் அவர்களை தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள். பின்னர் காலரா ஹாஸ்பிடலில் இந்த 10 நபர்களையும் அட்மிட் செய்யப்பட்டனர். மேலும் அதில் 5 பேர் நலமுடன் வீடு திருப்பினர்.
அதில் அட்மிட் செய்யப்பட்ட 65 வயதான ஒரு பெண் தீவிர மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதற்க்கு காரணம் கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததால் தான் 10 பேருக்கு இந்த உபாதைகள் ஏற்பட்டதாக அப்பர் நகர் மக்கள் கூறுகின்றனர்.
மேலும் அப்பர் நகர் சுற்றிலும் குப்பைகள் அகற்றப்படாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி குடிநீர் குழாய்களில் கலப்பதாக அவர்கள் சொல்கின்றனர். மக்கள் புகார் தெரிவித்த போது மாநகராட்சி நடவடிக்கை எடுத்திருந்தார் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது என பகுதி மக்கள் தெரிவித்தனர்.