கோவையில் கொரோனா பாதிப்பினால் பெண் உயிரிழப்பு
அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறி உட்பட பல்வேறு பாதிப்புகளுடன் சிகிச்சை பெற்று வந்த
55 வயது பெண் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
கோவை உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுக்கு கடந்த 17ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருந்த அவருக்கு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படவே, கொரோனா பரிசோதனையானது செய்யப்பட்டது. அதில் 55 வயது பெண்ணிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட சிகிச்சைகளுடன் சேர்த்து கொரோனா தொற்றுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை 7.15 மணி அளவில் 55 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணுக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருந்ததாகவும், நுரையீரல் புற்று நோய்க்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதியானதாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்தார்.
உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உடனடியாக எரியூட்டப்பட்டது. நீண்ட இடைவேளைக்கு பின்னர் கோவையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்திருப்பது குறிப்பிடதக்கது.