அழகான ஆண்களை பார்த்தால் மயங்கி விநோத நோய் இங்கிலாந்து நாட்டில் உள்ள பெண்ணிற்கு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டி புரவுன் என்ற 32 வயது பெண்ணிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. ஆனால், இவருக்கு இருக்கும் விநோத நோய் கேட்போரை ஆச்சர்யமடைய செய்துள்ளது. கோபம், சிரிப்பு மற்றும் பயம் வந்தால் மயங்கி விழும் கிறிஸ்டி தற்பொழுது கவர்ச்சியாக வசீகரிக்கக்கூடிய ஆண்களை பார்த்தாலும் மயங்கி விழுந்து விடுகிறாராம். கேடப்ளெக்ஸி எனப்படும் இந்த வகை நோயால் பாதிக்கப்பட்ட கிறிஸ்டி ஒருநாளைக்கு 5 முறையாவது மயங்கி விழுகிறார்.
சிலநாட்களில் அவரது மனநிலையில் மோசமடைந்தால் அதிகமாக 50 முறை பங்கி விழுவார். இதனால் பெரும்பாலும் கிறிஸ்டி வெளியே செல்வதை கிறிஸ்டி, அப்படியே வெளியே சென்றாலும் தலை குனிந்தபடியே செல்கிறாராம். இதனால் பாதிக்கப்பட்டாலும் சில நேரங்களில் தனக்கு நன்மை ஏற்படுவதாக கிறிஸ்டி கூறுகிறார். யாராவது என்னிடம் சண்டைக்கு வந்தால், நான் வாக்குவாதம் செய்யத் தொடங்கியவுடனேயே மயங்கி விழுந்து விடுவேன், உடனே சண்டை நின்றுவிடும் என வேடிக்கையாக கூறுகிறார் கிறிஸ்டி..!
தனது நோயின் தீவிரம் குறித்து பேசிய கிறிஸ்டி,” ஒரு முறை ஷாப்பிங் செய்து கொண்டிருந்தபோது, யாரோ ஒருவர் பார்ப்பதற்கு நன்றாக இருப்பதை பார்த்து தனது கால்கள் பலவீனமாகிவிட்டதாகவும், ஆதரவுக்காக உறவினர் மீது சாய்ந்து கொண்டதாகவும் பத்திரிகையிடம் கூறியுள்ளார்.
மேலும், பொது வெளியில் செல்லும்போது தன்னை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்கவும், ஒவ்வொரு முறையும் தனது முழங்கால்கள் பலவீனமடையும் போது தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளாமல் இருக்கவும் தலைகுனிந்தப்படியே நடப்பதாக கிறிஸ்டி மன வருத்தத்துடன் கூறியுள்ளார்.