Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புற்றுநோயுடன் போராடும் பெண்!!! அந்த பெண்ணுக்கு மொட்டை அடித்துவிட்டு தானும் மொட்டை அடித்த கணவர்!!! இணையத்தில் வீடியோ வைரல்!!!

புற்றுநோயுடன் போராடும் பெண்!!! அந்த பெண்ணுக்கு மொட்டை அடித்துவிட்டு தானும் மொட்டை அடித்த கணவர்!!! இணையத்தில் வீடியோ வைரல்!!!

புற்றுநோயுடன் போராடும் பெண் ஒருவருக்கு அவருடைய கணவன் மொட்டை அடித்து விடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உடல் அளவிலும் சரி மனதளவிலும் சரி மிகப் பெரிய வலிகளை அனுபவித்து வருகின்றனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படும். இந்த கீமோதெரபி சிகிச்சைகளால் புற்றுநோயால் பாதிக்ப்பட்ட நபர்களுக்கு தலைமுடி கொத்து கொத்தாக உதிரும்.

அதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தலையை மொட்டை அடித்துக் கொள்வார்கள். உணர்வு ரீதியாக இந்த வலிகளை கடப்பது மிகவும் கடினமான ஒரு செயலாகும். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் செயலியில் தற்பொழுது வீடியோ ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

அந்த வீடியோவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு அவருடைய கணவர் மொட்டை அடித்து விடும் காட்சிகள் உள்ளது. அதுமட்டுமில்லாமல் புற்றுநோயை எதிர்த்து போராடும் மனைவிக்கு ஆதரவாக அவருடைய கணவரும் மொட்டை அடிக்கும் காட்சியும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

அந்த நேரத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் கதறி அழும் காட்சிகள் வீடியோவை பார்க்கும் அனைவரின் மனதையும் உருக்குகின்றது. இந்த வீடியோ பகிரப்பட்ட சில மணி நேரங்களில் 17 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

அந்த வீடியோவை பார்க்கும் பயனர்கள் அனைவரும் அந்த பெண்ணுக்கு ஆறுதல் தரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் அந்த பெண் புற்றுநோயில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும் என்றும் பிராத்தனை செய்வதாகவும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

Exit mobile version