Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வேலை வாங்கி தரேன்னு சொன்னீங்களே! இப்போ என்னை இப்படி பண்ணிட்டீங்களே!

கணவன் மற்றும் மனைவியிடம் வேலை வாங்கி தருவதாக கூறி கணவனை அடித்து விட்டு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த சம்பவம் சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூர் என்ற இடத்தில் நடந்துள்ளது. வேலை வாங்கி தருவதாக கூறி கணவனை அடித்து விட்டு மனைவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஜம்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள ஜஞ்ச்கிரை பகுதியை சேர்ந்த தம்பதியினர் வேலை தேடி ராய்ப்பூருக்குச் சென்றபொழுது தான் இந்த கொடூரமான சம்பவம் கம்தாராய் என்ற பகுதியில் நிகழ்ந்தது.

 

சுமார் ஒரு மணி நேரம் வேலை தேடி அலைந்துவிட்டு மிகவும் களைப்பாக தம்பதிகள் ஓய்வெடுக்க அருகில் உள்ள கோவிலுக்கு வந்துள்ளனர்.

 

தம்பதியினர் இருவரும் அடுத்த நாள் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்ய திட்டமிட்டு கொண்டிருப்பதை பார்த்த அந்த மூன்று குற்றவாளிகள் அவர்களுடன் சகஜமாக உரையாடலில் ஈடுபட்டு உள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் குடிபோதையில் இருந்துள்ளனர். அவர்கள் அந்தப் பெண்ணின் கணவருக்கு வேலை தருவதாக வாக்குறுதி அளித்து, அவரை ஒரு ஒதுக்குப்புறமான பகுதிக்கு வாகனத்தில் அழைத்துச் சென்று உள்ளனர். அவர்கள் அவரை அடித்து விட்டு, அவரது தொலைபேசியை எடுத்து வீசி விட்டனர்.

 

பின்னர் அந்த குற்றவாளிகள் மூவரும் அந்த பெண் காத்திருந்த இடத்திற்கு திரும்பி சென்று கணவர் அழைத்ததாக அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளனர். அந்தப் பெண்ணும் அதை நம்பி சென்று இருக்கிறார், ​​குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் அந்தப் பெண்ணை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பாலியல் வன்கொடுமை செய்து அந்தப் பெண்ணை காயப்படுத்தியுள்ளனர்.

 

பின்னர் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் அந்த பெண்ணை கொண்டு வந்து கோவில் அருகே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து அந்த பெண் அருகில் உள்ள கம்தரை காவல் நிலையத்திற்கு வந்து நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் கூறியுள்ளார்.

 

அதற்குள் அந்த பெண்ணின் கணவரும் தன் மனைவி இருந்த கோவிலுக்கு திரும்பி வந்துள்ளார். திரும்பி வந்த பின்னே தன் மனைவியை காணாததால் அவரும் அதே போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துள்ளார். அங்கு தன் மனைவியை கண்டதும் நடந்தவற்றை கூறியுள்ளார். இருவரும் கொடுத்த வாக்குமூலத்தின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மூன்று கொடூரர்களை கைது செய்துள்ளனர்.

Exit mobile version