Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தலையில் மூன்று குண்டுகளோடு 7 கி.மீ. கார் ஓட்டிய பெண்மணி ! மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை !!

தலையில் மூன்று குண்டுகளோடு 7 கி.மீ. கார் ஓட்டிய பெண்மணி ! மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை !!

பஞ்சாப்பில் குடும்பத் தகராறில் சுடப்பட்ட பெண் 3 குண்டுகளோடு 7 கி மீ தூரம் காரை ஓட்டிச்சென்ற சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 42 வயது பெண்மணி சுமித் கவுர் என்ற பெண் தனது வயது முதிர்ந்த தாயாரோடு வசித்து வந்துள்ளார். இவரது பெயரில் சுமார் 15 ஏக்கர் நிலம் இருக்கிறது. இது அவரது தந்தை இறக்கும் போது சுமித்துக்கு கொடுத்த நிலமாகும்.  சுமித்துக்கு ஒரு சகோதரர் உள்ளார். அவருக்கு சுமித்தைப் போலவே நிலம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சுமித்தின் நிலத்தை அபகரிக்க அவர் முயன்றுள்ளார். இது சம்மந்தமாக சுமித்துக்கும் அவரது சகோதரருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது.

நிலத்தைக் கொடு்க்காததால் சுமித் மேல் அவரது சகோதரர் கோபத்தில் இருந்துள்ளார். இதையடுத்து சில நாட்களுக்கு முன்னர் சுமித்தை மிரட்ட துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார் சகோதரர். அப்போது இரு தரப்புக்கும் இடையே தகராறு பெரிதாகியுள்ளது.

அப்போது  சுமித்தின் சகோதரரும் அவரது 10 ஆவது படிக்கும் மகனும் சுமித்தையும் அவரது தாயாரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் சுமித்தின் தலையிலும் முகத்திலும் 3 குண்டுகள் பாய்ந்துள்ளன. அவரது தாயாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து தப்பிய சுமித் குண்டுகள் தலையில் இருந்த படியே 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்று இது சம்மந்தமாக புகார் அளித்துள்ளார். பின்னர் அங்கிருந்து போலிஸார் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அவரது தலையில் இருந்த குண்டுகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இந்த சம்பவமானது பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலிஸார் சுமித்தின் புகாரை அடுத்து அவரது சகோதரரையும் அவரது மகனையும் கைது செய்துள்ளனர்.

Exit mobile version