Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மின்சாரம் தாக்கியதில் பெண் உயிரிழப்பு:! எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லையென்று நழுவும் மின்சார வாரியம்!

மின்சாரம் தாக்கியதில் பெண் உயிரிழப்பு:! எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லையென்று நழுவும் மின்சார வாரியம்!

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர்,வீட்டு வேலை பார்த்து வருகின்றார்.அவர் வேலை பார்க்கும் வீட்டில் வேலையை முடித்துவிட்டு,கையில் உணவுடன் திரும்பிக் கொண்டிருந்தார்.அப்பொழுது செல்லும் வழியில் மழைநீர் தேங்கி கிடந்ததால்,ஓரமாக செல்லலாம் என்று நினைத்து ஓரமாக சென்றுள்ளார்.
அப்பொழுது விழுந்துகிடந்த மின்கம்பியை தவறுதலாக மிதித்துள்ளார்.மழைகாலம் என்பதனால் மின்கசிவு காரணமாக,அந்தப் பெண் கம்பியை மிதித்த உடனே மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மழைக்காலங்களில் இதுபோன்ற சம்பவம் நடந்த வண்ணமே இருப்பதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் வெளியில் நடமாட பயன்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

இந்நிலையில் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பெண் மின்சாரம் தாக்கி இறந்ததற்கும் எங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று மின்சார வாரியம் கூறியுள்ளது.மேலும் இதுகுறித்து, கூறுகையில் மாநகராட்சியின் தெருவிளக்கு கம்பியை மிதித்தனால்தான் அந்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்,மின் இணைப்பு பெட்டிவரை மட்டும்தான் மின்சாரத்தை விநியோகம் செய்வதுதான் எங்கள் பணி,இதனால் அந்தப் பெண் உயிரிழப்பிருக்கும் மின்சார வாரியத்திற்கும் எந்தவிதமான சம்பந்தம் இல்லை என்றும்,அந்தப் பெண்ணின் உயிரிழப்பிருக்கு அந்த பகுதியிலிருக்கும் மின்ஊழியர்கள் தான் பொறுப்பு என்றும் மின்சார வாரியம் நாசுக்காக கூறியுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Exit mobile version