Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஓடும் காரில் பெண்ணுக்கு நடந்த கொடுமை.. 10 மாத குழந்தை பலி..!

வாடகை காரில் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது 10 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம், பெல்ஹர் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது 10 மாத குழந்தையுடன் போஷ்ரி பகுதிக்கு செல்ல வாடகை கார் ஒன்றைபுக் செய்துள்ளார். இந்நிலையில், சம்பவதன்று அந்த கார் அவரை ஏற்றுவதற்கு வந்துள்ளது. அந்த வாடகை காரில் மேலும், சில பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த கார் மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த பெண்ணுக்கு காரில் பயணம் செய்த பயணிகளும் ஒட்டுநரும் பாலியல் தொல்லை அளித்துள்ளனர். மேலும், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளன்னர்.அந்த பெண் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அந்த பெண்ணின் குழந்தையை வெளியே தூக்கி வீசியுள்ளனர்.

 

மேலும், அந்த பெண்ணையும் காரில் இருந்து வெளியே வீசியுள்ளனர். இதில், அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், அந்த பெண் படுகாமயமடைந்தார். இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒடும் காரில் பெண் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிக்கப்பட்டு அவரது குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version