Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விபத்தில் உயிரிழந்த பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்: நிவாரண நிதி அறிவித்த முதலமைச்சர்

Woman Special Assistant Inspector of Police who died in accident: Chief Minister announced relief fund

Woman Special Assistant Inspector of Police who died in accident: Chief Minister announced relief fund

கோவையில் சாலை விபத்தில் உயிரிழந்த பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு இரங்கல் தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கு நிவாரண நிதியை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக முதலமைச்சர் அறிவித்த அறிக்கையில் கோவை மாவட்டம் வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவல் சிறப்பு ஆய்வாளராக பணிபுரியும் கிருஷ்ணவேணி (வயது 51) என்பவர் நேற்று (31.10.2024) மாலை அங்கலக்குறிச்சியிலுள்ள தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பணிக்கு சென்று கொண்டிருந்தபோது,  கோட்டூர் அருகில் எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் சிக்கியுள்ளார்.

சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்து இருக்கிறார் என்ற துயரச்  செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும். அடைந்தேன் பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணவேணியின் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கு அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். மேலும் கிருஷ்ணவேணியின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு  நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக  குறிப்பிட்டார் முதல்வர்.

Exit mobile version