Salem: கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை ஒரு பெண் செருப்பால் அடித்த சம்பவம் சேலம் புதிய பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் சூரமங்கலம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரின் தங்கை கமலேஸ்வரி உட்பட மூன்று பேர் சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு, தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு வந்தவரை மீண்டும் கரூர் அனுப்புவதற்காக நேற்று முன்தினம் இரவு அவர்கள் சென்றுள்ளார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் சரவணவேலன் காரை நிறுத்தி குரங்கு சாவடியில் இருந்து மேம்பாலம் வழியாக புதிய பேருந்து நிலையத்திற்குள் செல்ல முடியாது.
ஏனென்றால் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. எனவே நீங்கள் இந்த வழியாக செல்ல முடியாது என்று கூறி வேறு வழியில் செல்லுங்கள் என அறிவுறுத்தினர். அப்போது ஏன் கார் உள்ளே போகாது என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது உணர்ச்சி வசப்பட்ட கமலேஸ்வரி காரில் இருந்து இறங்கி தனது காலில் அணிந்திருந்த செருப்பை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சரவணவேலனை 2 முறை தாக்கிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சரவணவேலன் பள்ளபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் தனது பணியை செய்ய விடாமல் தடுத்ததால் 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக், கமலேஸ்வரி, ஹரிகிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தார்கள். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.