Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண்களை பாதுகாப்பதில் தமிழகம்தான் முதலிடம். – முதல்வர் பேச்சு

பெண்களை பாதுகாப்பதில் தமிழகம்தான் முதலிடம். – முதல்வர் பேச்சு

இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

நாகை மாவட்டம் ஒரத்தூரில் நடந்த மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர், ஜி.எஸ் கல்வி குழுமத்தின் சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு சிறப்புறையாற்றினார்.விழாவில் முதல்வர் பேசியதாவது;

வருடந்தோறும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாளான இன்று இந்த நிகழ்ச்சியில் பேசுவதற்கு பெருமை அடைகிறேன். தமிழக பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிருக்காக உண்மையாக பாடுபடும் மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது.

இயற்கையின் படைப்பான நதிகளுக்கும், வழிபடும் தெய்வங்களுக்கும் பெண்களின் பெயரை வைத்து பெண்ணின் பெருமையை போற்றுகிறோம். நம் நாட்டையும் தாய்நாடு என்றுதான் அழைக்கிறோம், ஆண்கள் கல்வியறிவு கற்றால் அவரது குடும்பம் மற்றும் அவரை சார்ந்தவர்கள் மட்டுமே முன்னேற முடியும். ஆனால் ஒரு பெண் கல்வியறிவு பெற்றால் சமுதாயத்தையும், நாட்டையும் உயர்த்துவார்கள். மாதவராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும் என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் வரிகளை நினைவூட்டினார்.

பெண்கள்தான் நம் நாட்டின் கண்கள், பெண்களின் முன்னேற்றமே தமிழகத்தின் முன்னேற்றம் என்ற நலனைக் கருதி தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் தேவையான வகையில் முழுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தமிழகம்தான் முதன்மையாகவும், முன்னோடியாகவும் விளங்குகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

இவ்விழாவை அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கினார். இ.ஜி.எஸ் கல்விக் குழுமத்தின் முதன்மை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் பல்வேறு அதிமுக அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

Exit mobile version