Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

போலீசார் சாதகமாக பேசாததால் பெண்ணின் விபரீத செயல்!

Woman's outrageous act because the police did not speak positively!

Woman's outrageous act because the police did not speak positively!

போலீசார் சாதகமாக பேசாததால் பெண்ணின் விபரீத செயல்!

எது எதெற்கெல்லாம் உயிரை விடுகிறார்கள் பாருங்கள். என்ன மக்களோ மன தைரியம் இன்றி. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் அகிலா. 27 வயதான இவருக்கும், இவரது கணவர் பாரதிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. அதன் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கணவரை பிரிந்து தனது தாயார் ராணி வீட்டில் வசித்து வருகிறார் அகிலா.

இவர்களுக்கு பரத்குமார் என்ற ஒன்பது வயது மகனும் யாழினி என்ற ஐந்து வயது மகளும் உள்ளனர். இந்த  சூழ்நிலையில் வயலூரில் அதே பகுதியில் வசிக்கும் அமரதீபன் என்ற 29 வயதான நபருடன் அகிலாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதைனையடுத்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருப்பூர் சென்று, அங்கேயே கூடியிருக்க ஆரம்பித்தனர். இதுகுறித்து அகிலாவின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த மே மாதம், திருப்பூரில் தங்கியிருந்த அமரதீபன் மற்றும் அகிலா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதன் பின் அவர்களை சமரசம் செய்த போலீசார் இரண்டு பேரையும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பிவைத்தனர். இதன் காரணமாக அமரதீபனிடம் உள்ள 8 பவுன் நகை மற்றும் 50,000 ரூபாயை பெற்றுத்தருமாறு அகிலாவின் தாயார் ராணி போலீசில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக நேற்று போலீசார் விசாரணை நடத்திய போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதில் அமரதீபனுக்கு ஆதரவாக போலீசார் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அகிலா போலீஸ் நிலையம் முன்பு தனது ஸ்கூட்டரில் வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றி தீ பற்ற வைத்துக்கொண்டார். இதன் காரணமாக அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அகிலாவின் உடலில் தீப்பற்றி எரிந்த போது அவரை மீட்க முயன்ற அகிலாவின் அண்ணன் மற்றும் பெண் ஏட்டு ரீத்தல் ஆகியோர் காப்பாற்றினர்.

மேலும் அவரை அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை காப்பாற்ற முயன்ற போது இருவரின் கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவர்களுக்கும் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Exit mobile version