பல்கலைக்கழகத்தில் பெண்கள் சேர தடை! அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
ஆப்கானிஸ்தான் உயர்கல்வித்துறை அமைச்சர் நேடா முகமது நதீம் ஹிஜாப் விதிமுறைகளை பெண்கள் முறையாக கடைபிடிக்காமல் பள்ளி முடித்துவிட்டு பல்கலைக்கழகத்திற்கு செல்லும் பொழுது ஏதோ திருமணத்திற்கு செல்வது போல உடை அணிந்து செல்கின்றனர் என தெரிவித்தார்.ஆப்கானிஸ்தானில் தலீபான் அமைப்பினர் ஆட்சியை கைப்பற்றினார்கள்.அப்போது இருந்தே பெண்களுக்கு வழங்கப்படும் சுகந்திரத்தை மெல்ல மெல்ல பறித்து வருவதாக உலக நாடுகள் அனைத்தும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும் அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் சேர்ந்து படிக்க தலீபான்கள் தடை விதித்துள்ளனர்.தலீபான்களின் இந்த அதிரடியான நடவடிக்கை சர்வதேச அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது.அதற்கு ஆப்கானிஸ்தான் உயர்கல்வித்துறை அமைச்சர் நேடா முகமது நதீம் ஹிஜாப் கூறுகையில் மேலே குறிப்பிட்டுள்ளதை விளக்கமாக கூறினார்.
அதனை தொடர்ந்து சில அறிவியல் படிப்புகள் பெண்களுக்கு உகந்ததாக இல்லை,பொறியியல் உள்ளிட்ட சில படிப்புகள் மாணவிகளின் கண்ணியம் மற்றும் ஆப்கானிஸ்தானிற்கென உள்ள கலாச்சாரத்திற்கு ஏற்றவாறாக இல்லை என கூறினார்.மேலும் ஆண்களின் துணை இல்லாமலேயே பெண்கள் தனியாக பயணம் செய்கின்றனர் என விளக்கம் அளித்தார்.
மேலும் ஆப்கானிஸ்தானின் நவ்கர்ஹார் பல்கலைக்கழகத்தில் தலிபான்கள் பெண் கல்விக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் தேர்வு எழுதாமல் புறக்கணித்தனர்.நங்கர்ஹார்,காந்தஹாரில் மாணவர்கள் தாலிபான்களுக்கு எதிர்த்து பலகைகள் ஏந்தி போராட்டம் நடத்தினார்கள்.
தலீபான்கள் கடந்த ஆண்டு ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே இஸ்லாமிய சட்டத்தில் கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.இதுமட்டுமின்றி நடுநிலை பள்ளிகள்,மேல்நிலைப் பள்ளிகளில் பெண்கள் கல்வி கற்பதற்கும் தடை விதித்துள்ளனர்.