கனிமொழி பயணம் செய்த அதே நாளில் பிரபல ஓட்டுநரின் வேலை காலி! காரணமென்ன?
கோயம்புத்தூரில் தனியார் பேருந்தில் பெண் ஓட்டுநராக பணியாற்றிய ஷர்மிளா திடீரென்று அந்த பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இன்று காலையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி பயணித்த நிலையில் அவருடைய வேலை காலியாகியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் கோவையில் தனியார் பேருந்தை ஓட்டிய ஷர்மிளா தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் பேருந்து மற்றும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை ஆண்கள் மட்டுமே இயக்கி வந்த நிலையில் ஒரு பெண் பேருந்தை ஓட்டியது அனைத்து தரப்பிலும் பாராட்டை பெற்றது.

இதனைத்தொடர்ந்து இவர் தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக பேசு பொருளாக உள்ளார்.குறிப்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் சில தினங்களுக்கு முன் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அவரை நேரில் சந்தித்து பாராட்டினார்.மேலும் அவர் ஓட்டிய பேருந்தில் பயணம் செய்தார்.
அந்த வகையில் இன்று திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழியும் அவரை நேரில் சந்தித்து பாராட்டினார். மேலும் அவர் பேருந்தில் பயணம் செய்திருந்தார். இந்நிலையில் தான் அவர் பயணம் செய்த அதே நாளில் பெண் ஓட்டுநராக பணியாற்றிய ஷர்மிளா அந்த தனியார் பேருந்து நிறுவனத்தால் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இது சம்பந்தமாக பலவேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து விளக்கம் அளித்த ஷர்மிளாவின் தந்தை கனிமொழி பயணத்தின் போது அவரிடம் நடத்துநர் டிக்கெட் கேட்ட விவகாரம் தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்று கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் முதல் பீளமேடு வரை பயணம் செய்த கனிமொழி அவர்களிடம் நடத்துநர் டிக்கெட் கேட்டதாகவும், அவர் டிக்கெட் எடுத்து விட்டதாக ஓட்டுநர் ஷர்மிளா சொன்னதாகவும் கூறியுள்ளார்.இதன் பிறகு ஏற்பட்ட விவாதத்தில் எம்பியிடம் டிக்கெட் கேட்கலாமா என ஓட்டுநர் ஷர்மிளா கேட்டு பிரச்சனை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து இந்த விவகாரம் சம்பந்தபட்ட நிறுவனத்தின் தலைமைக்கு செல்ல இருவரையும் அழைத்து பேசிய நிறுவன உரிமையாளர் இதற்கு காரணமாக இருந்த ஓட்டுநர் ஷர்மிளாவை பணியிலிருந்து விலகி கொள்ளுமாறு கூறியுள்ளார். விளம்பரத்திற்காக அவர் இப்படி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது.