Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்! தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவருக்கு ஏற்பட்ட அசிங்கம்

MK Stalin-DMK Leader News4 Tamil Online Tamil News Today

MK Stalin-DMK Leader News4 Tamil Online Tamil News Today

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்! தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவருக்கு ஏற்பட்ட அசிங்கம்

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாத இடைவெளியே உள்ள நிலையில் இந்த முறையாவது தேர்தலில் அதிகமான தொகுதியில் வெற்றி பெற்று முதலமைச்சராக உட்கார வேண்டிய கட்டாயத்தில் திமுக தலைமை உள்ளது.ஏனென்றால் ஏற்கனவே 10 வருடங்களாக திமுக கட்சியானது ஆட்சிக்கு வராத நிலையில் தற்போது திமுக கட்சியானது தோற்றுவிட்டால் கட்சியின் எதிர்காலமே அழிந்துவிடும் என்ற மோசமான நிலையில் உள்ளது.

இந்த தேர்தல் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அக்னி பரிட்சை போன்றது.அதனால் தான் வட மாநிலங்களிலிருந்து தேர்தல் வியூகம் அமைக்க பிரசாந்த் கிஷோர் என்பவரை அழைத்து வந்தார்கள். எப்பொழுதும் பிராமணர்களை எதிர்த்து கடும் விமர்சனங்களை வைக்கும் திமுகவிற்கு ஆலோசனை செய்ய ஒரு பிராமணர் தேவையா (பிரசாந்த் கிஷோர் பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது) என்று பலர் கேள்வி கேட்டாலும் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் அமைதி காத்து வந்தது திமுக தலைமை.

பிரசாந்த் கிஷோர் அரசியல் ஆலோசனைப்படி ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய முக அமைப்பு மற்றும் தலை முடியின் ஸ்டைலை கூட மாற்றினார்.இவ்வாறு வரவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான ஒவ்வொரு வியூகங்களையும் திமுகவிற்காக பிரசாந்த் கிஷோர் வகுத்து கொடுத்து வருகிறார்.

அதேபோல் அதிமுக அரசின் குறைகளை பட்டியலிட்டு விளம்பரம் செய்தும் கல்விக் கடன் ரத்து விவசாய கடன் ரத்து நீட் தேர்வு‌ ரத்து போன்ற அறிவிப்புகளை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சொன்னது போன்று தற்போதும் கூறி வருகிறார்கள். திமுகவினர் நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று வந்தால் நகை கடன் தள்ளுபடி செய்யும், அதனால் இப்பொழுதே மக்களாகிய நீங்கள் சென்று நகை கடன் வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் பிரச்சாரம் செய்தார்.

ஏற்கனவே இவருடைய பிரச்சாரத்தை உண்மை என்று நம்பி சிலர் நகை கடன் வாங்கினார்கள் அவர்களுக்கு இன்று வரை எந்த அறிவிப்பும் வரவில்லை அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.அதே மாதிரி தான் கல்வி கடன் விவசாய கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகள் பற்றி நாடாளுமன்றத்தில் திமுகவினர் எதுவுமே பேசவில்லை.

இந்நிலையில் செய்ய முடியாத பல வாக்குறுதிகளை கொடுத்து மக்களின் ஓட்டுக்களை பெற்று மக்களை ஏமாற்றி வருகிறார்கள் திமுகவினர் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.அதேநேரத்தில் திமுக தேர்தலுக்காக அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி தற்போதே நிறைவேற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் கிராம சபை கூட்டம், ஸ்டாலின் குரல்,உங்கள் தொகுதியில் ஸ்டாலின் போன்ற திட்டங்களை அறிவித்து அதிமுக அரசின் குறைகளை மக்கள் மனதில் ஆழமாக விதைத்து வருகிறார்.

இதிலும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தில் ஊர் ஊராகச் சென்று மக்களின் குறைகளை கேட்கிறார். மக்கள் தங்கள் குறைகளை ஒரு கடிதத்தின் வாயிலாக தங்களுக்கு அனுப்பினால் அந்த குறைகளை 100 நாட்களில் நிவர்த்தி செய்து காண்பிப்போம் என்று சூளுரை விட்டு மக்களின் மனுக்களை பெற்றுக் கொண்டு வருகிறார்.இவ்வாறு ஸ்டாலின் என்ன தான் புதிய வியூகங்களை அமைத்து பிரச்சாரம் ஆரம்பித்தாலும் அது இறுதியில் அவருக்கே பாதகமாகவோ அமைந்து விடுகிறது.

 

அந்த வகையில் தான் இந்த சம்பவமும் நடந்துள்ளது.அதாவது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தில் நாகப்பட்டினத்தை சேர்ந்த வசந்தி என்ற பெண்மணி தி மு க ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு மனுவை அனுப்பியுள்ளார்.அதில் கீழையூர் திமுக ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் எங்களுடைய நிலத்தை அபகரித்து விட்டார் என்றும் அந்த நிலத்தை மீண்டும் மீட்டு தருமாறு எழுதியிருந்தார்.இதைப்பார்த்த கட்சியினர் அப்போதைக்கு சமாளித்து அனுப்பியுள்ளனர்.

ஆனால் அந்த கோரிக்கை கடிதமானது சமூக வலைத்தளங்களில் வெளியாகி திமுகவிற்கு எதிராக விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.மக்களின் குறைகளை கேட்க சென்ற ஸ்டாலினுக்கு இது பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.இதே போல் ஒவ்வொரு ஊரிலும் திமுகவினரால் நிறைய அராஜகம் நடந்து கொண்டு தான் இருக்கிறது என பல தரப்பு மக்களும் குற்றம் சாட்டி கொண்டே தான் வருகிறார்கள்.

திமுக பத்து வருடமாக ஆட்சியில் இல்லாத போதே இவ்வாறு நில அபகரிப்பில் ஈடுபடுகிறது என்றால் இன்னும் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்குமோ என்று மக்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.

 

 

Exit mobile version