ரூமில் அடைக்கப்பட்ட 4 முதல் 82 வயது பெண்கள்! இராணுவ வீரர்கள் வயகரா சாப்பிட்டு மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை!!
உக்ரைன் மற்றும் ரஷ்யா கிடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இதில் ரஷ்யா மனிதாபிமானம் இன்றி மருத்துவமனை உட்பட அனைத்தையும் தாக்கியது. அதுமட்டுமின்றி அனைத்து நாட்டினரும் அஞ்சும் நோக்கில் உக்கரனின் அணுஉலை மீதும் தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவிற்கு ஈடு கட்டும் விதமாக உக்ரைனும் யுத்தத்தில் இறங்கியது. இருப்பினும் ரஷ்ய மற்றும் உக்ரைன் இருவருக்கிடையே உயிர் சேதம் அதிகம். மேலும் ரஷ்யாவின் போரை நிறுத்த பல நாடுகளும் தங்களது இறக்குமதியை தடை செய்தது.
அதனையெல்லாம் பொருட்படுத்தாத ரஷ்யா, தற்பொழுது வரை உக்ரைன் மீது போர் தொடுத்து தான் வருகிறது. ரஷ்யா போர் தொடுப்பதை குறித்து ஐநாவின் சிறப்பு பிரதிநிதி பிரமிளா பல அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து அங்குள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் பலரை சிறை பிடித்துள்ளனர்.ஆண்கள் மற்றும் சிறுவர்களும் கூட இதில் உள்ளனர்.
அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர். ரஷ்யா தனது படைகளுக்கு வயாகரா கொடுத்து வருகிறது. இதுவும் ஒருவித போர் உத்தியாக பயன்படுத்துகின்றனர். உக்ரைன் பெண்கள், சிறுமிகள், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் என அனைவரையும் ஒரு அறையில் போட்டு அடைத்து விடுகின்றனர். அவர்களை மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். அது மட்டுமின்றி தொடர்ந்து பிறப்புறுப்பு சிதைவுகள் சம்பந்தமாகவே வழக்குகள் வருகிறது.
இதை வைத்து பார்க்கையில் ரஷ்ய வீரர்கள் வயகரா எடுத்துக் கொள்வது தெரியவந்துள்ளது. இதனை பாதிக்கப்பட்ட பெண் சாட்சியோடு தெரிவித்துள்ளார். இதில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் என்னவென்றால் இவ்வாறு பாலியல் தொல்லை செய்யப்படுபவர்கள், நான்கு வயது முதல் 82 வயது வரை இருக்கும் அனைத்து குழந்தை மற்றும் பெரியவர்கள் உள்ளனர் என்பதுதான். இது குறித்த சில வழக்குகள் மட்டுமே அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வெளியில் வராதது ஏராளம் என கூறியுள்ளார்.