மக்கள் சேவையே முக்கியம்! திருமணத்தை தள்ளிவைத்த பெண் போலீஸ்! கடமையே கண்ணாக கம்பீரத்துடன் களத்தில்..!!
தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பொறுப்பில் இருப்பதால் பெண் காவல்துறை அதிகாரி தனது திருமணத்தை தள்ளிவைத்துள்ள நிகழ்வு உத்தரகண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் ரிஷகேஷி பகுதியில் உள்ள முனி கி ரெட்டி காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்ட்டராக பணிபுரிந்து வரும் காவல்துறை அதிகாரிக்கு கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமண நாளில் ஷாதிகா காவல் பணிக்கு வந்ததை பார்த்து உடன் பணிபுரியும் காவல் பணியாளர்கள் அதிர்ச்சியாகினர்.
இதையடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருக்கும் பகுதியில் நிவாரணம் வழங்கும் பணி இருப்பதால் தனது திருமணத்தை தள்ளி வைத்ததாக கூறினார். இதைக்கேட்ட சக காவல்துறை பணியாளர்கள் மகிழ்ச்சியில் ஷாதிகாவை பாராட்டி தள்ளினர்.
கொரோனா நிவாரண பணிகளை முடிந்த பின்னர் திருமணம் செய்துகொள்வதாக தனது பெற்றோரிடம் கூறியதை அவர்களும் ஏற்றுக் கொண்டனர். அவருடைய வருங்கால கணவரும் நடைமுறையில் உள்ள இக்கட்டான சூழலை புரிந்து கொண்டு நடக்கவிருந்த திருமணத்தை தள்ளிவைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். தன் விருப்பத்திற்கு சுயநலமாக செயல்படாமல் மக்கள் சேவையே முக்கியம் என்று கடமையை தொடர்ந்து கம்பீரத்துடன் செய்து வரும் பெண் போலீஸ் அதிகாரிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.