Gold Anklet in Tamil: தங்கத்தால் ஆன கொலுசு மெட்டி ஏன் பெண்கள் அணிவதில்லை தெரியுமா?

0
308
#image_title

Gold Anklet in Tamil: இன்றைய காலகட்டத்தில் முதலீடுக்கு ஏற்ற பொருளாக நம் அனைவரும் தங்கத்தை பார்க்கிறோம். அதனால் ஏழை முதல் பணக்காரர் வரை கிராம் முதல் கிலோ வரை தங்கத்தை வாங்கி சேமித்துக் கொள்கிறார்கள். நாட்கள் செல்ல செல்ல தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

பெண்களுக்கு தங்கம் என்றாலே அளவில்லா மகிழ்ச்சி தான். தங்கத்தால் ஆன நகைகளை அணிந்து கொள்வது என்றால் அவர்களுக்கு அவ்வளவு பிரியம். காரணம் தங்கத்தின் மீதான மோகம் அவர்களை விட்டு என்றும் மறைவதில்லை.

இந்நிலையில் காலம் காலமாக பெண்கள் தங்கத்தால் ஆன தோடு, மூக்குத்தி, நெக்லஸ், வளையல், ஒட்டியானம் போன்ற நகைகளுக்கு கொடுக்கும் ஆர்வத்தை ஏன் தங்கத்தால் ஆன கொலுசுகளுக்கோ, அல்லது மெட்டிகளுக்கும் அவர்கள் கொடுப்பதில்லை. எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தங்கத்தால் ஆன கொலுசு மெட்டியை அணிவதில்லை. ஆனால் தற்போது அது மாறி ஒருசிலர் அணிந்து வருவதும் உண்டு.

நம்முடைய முன்னோர்கள் இதற்கும் ஒரு காரணம் வைத்துள்ளார்கள். தங்கத்தால் ஆன கொலுசு, மெட்டி போன்றவற்றை பெண்கள் காலில் (Thanga kolusu kalil aniyalama) அணியக்கூடாது என்று அவர்கள் கூறிவந்தனர். அதைத்தான் இன்று வரை நாம் பின்பற்றுகிறோம். அதற்கு காரணம் ஒருசிலர் மூடநம்பிக்கை என்று நினைத்து விட்டுச் செல்லலாம்.

இந்து சாஸ்திரங்களின்படி தங்கத்தால் ஆன நகைகள் அணிவது மிகவும் மங்களகரமான ஒரு விஷயம். அது லட்சுமி தேவியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட பொருளை நாம் காலில் அணிந்து கொள்வதால் லட்சுமி தேவியை அவமதிப்பதாக கருதப்படுகிது.

அதுமட்டுமல்லாமல் நம் உடலில் ஒவ்வொரு பாகமும் நவகிரகங்களால் ஆளப்படுகிறது என்று நம் முன்னோர்கள் கூறி வருந்தனர். நம் வீட்டு பெரியவர்கள் இவ்வாறு சொல்வது வழக்கம் ஒரு கிராம் தங்க நகை வாங்கினாலும் குரு ஓரையில் பார்த்து வாங்க வேண்டும் என்று ஏனென்றால் அப்பொழுது தான் வீட்டில் தங்கம் சேரும் என கூறுவார்கள்.

உடலில் உள்ள ஒவ்வொரு பாகமும் நவகிரகங்களால் ஆளப்படும் பொழுது நம்முடைய கால் பாகம் சனி பகவானால் ஆளப்படுகிறது. அவ்வாறு இருக்கையில் குரு ஓரையில் பார்த்து வாங்கும் தங்க நகைகளை நம் கால் பாதத்தில் அணிந்தால் பகை கிரகங்களான குருவும், சனியும் ஒருவருக்கு விளைவுகளை ஏற்படுத்தும் என்பதாலும் கால்களில் தங்கத்தால் ஆன கொலுசும், மெட்டியும் அணிய கூடாது என்று  கூறி வந்தார்கள்.

மேலும் அறிவியல் ரீதியாக பார்க்கப்படும் பொழுது தங்கம் உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கும். வெள்ளி உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். அதனால் தங்கத்தை இடுப்பிற்கு மேலேயும், வெள்ளியை இடுப்பிற்கு கீழேயும், அணிவது மருத்துவ ரீதியாக நல்லது என்று கூறுவார்கள். மேலும் நாம் தங்கத்தை நம் உடலில் அனைத்து பாகங்களிலும் அணிந்தால் அது மேலும் நம் உடம்பிற்கு வெப்பத்தை அதிகரிக்கும் என்பதால் பல நோய்களும் உண்டாகும்.

மேலும் படிக்க: Palm Fruit in Tamil: கிடைத்தால் விட்டுவிடாதீர்கள்.. பலன் தரும் பனம்பழம்..!!