Women’s Equality Day Special – பெண்களை முன்னிலைப்படுத்தி தமிழில் வெளியான சில திரைப்படங்கள்
Women’s equality day – பெண்கள் சமுத்துவ தினம்
பல வருடங்களாக திரைப்படங்கள் அனைத்தும் கதாநாயகர்களை மையப்படுத்தியே எடுக்கப்பட்டு வந்தது. அவ்வாறு எடுக்கப்படும் படங்களில் கதாநாயகிகள் பெரும்பாலும் கவர்ச்சிக்காகவே பயன்படுத்தப்பட்டனர். அதே போல ஒரு திரைப்படத்தின் வெற்றியானது அந்த படத்தில் நடித்த கதாநாயகனின் வெற்றியாகவே போற்றப்பட்டது. அப்படத்தில் நடித்திருக்கும் நாயகிகள், துணை நடிகர்களின் நடிப்புகள் எல்லாம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்காது.
இப்படியுள்ள திரைத்துறையில் அன்று முதல் இன்று வரை பெண்களை மையப்படுத்தியும்,பெண் உரிமைகள் மற்றும் சமத்துவம் குறித்தும் அவ்வப்போது ஒரு சில திரைப்படங்கள் அரிதாக வெளியாகியுள்ளன.அதே நேரத்தில் சமீபத்தில் சில ஆண்டுகளாக பெண்களை மையப்படுத்தி பெண்களையே கதையின் நாயகியாக காட்டும் வகையில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அவ்வாறு வெளியாகும் படங்கள் வருமான ரீதியாகவும் ஓரளவு வெற்றியை பெற்று தந்துள்ளன.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் பெண்களை முன்னிலைப்படுத்தி வெளியான சில படங்களை பட்டியலிடலாம்.
1. மனதில் உறுதி வேண்டும் (1987)
2. மகளிர் மட்டும் (1994)
3. சிநேகிதியே (2000)
4. தென்மேற்குப் பருவக்காற்று (2010)
5. மாயா (2015)
6. 36 வயதினிலே (2015)
7. இறுதி சுற்று (2016)
8. அருவி (2017)
9. அறம் (2017)
10. கனா (2018)
11. கோல மாவு கோகிலா (2018)
இது மட்டுமல்லாமல் மௌனராகம், ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டால், மொழி, தரமணி, பச்சைக்கிளி முத்துச்சரம் உள்ளிட்ட பல படங்களில் பெண்களை முன்னிலைப்படுத்தியும் அவர்களுக்கான உரிமைகளை பற்றி பேசும் விதமாகவும் படமாக்கப்பட்டிருக்கும்.