தமிழகத்தை போலவே கர்நாடகாவிலும் மகளிர்க்கு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய “சக்தி திட்டம்” அந்த அரசாங்கம் கொண்டுவந்தது. மேலும் இந்த திட்டத்தை நிறுத்துவதாக கடந்த சில நாட்களாக மக்களிடையே பரவி வந்த நிலையில் அது குறித்து அந்த மாநில முதல்வர் சித்தராமையா சில முக்கிய கருத்துகளை கூறியுள்ளார். அதில் கடந்த 2021ம் ஆண்டில் தமிழகத்தில் இந்த திட்டம் கொண்டுவந்தது திமுக அரசு. இந்த திட்டத்தின் மூலமாகதான் திமுக வெற்றி பெற்றது.
இதனை எடுத்துகாட்டாக கொண்டு கர்நாடக அரசு இந்த திட்டத்தை நாங்கள் வெற்றி பெற்றால் செயல்படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனால் அந்த அரசு வெற்றி பெற்றது. அதன் பிறகு இந்த திட்டத்தை அந்த மாநில அரசு “சக்தி மகளிர் இலவச பயணத் திட்டம்” அறிமுகம் செய்தது. இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்ப்பு பொதுமக்களிடம் கிடைத்தது. இந்த திட்டத்தை குறைகளை கூறி வருகிறார் எதிர்க்கட்சி தலைவர் TK சிவக்குமார் என்றார். மேலும் இந்த திட்டத்தினை நிறுத்துவது குறித்து நாங்கள் பரிசீலிக்கக் கூட இல்லை என்று அவர் தெரிவித்தார்.
இந்த இலவச சேவையைப் பயன்படுத்தும் பெண்களில் 5 முதல் 10% தான். ஆனாலும், அவர்கள் டிக்கெட் கட்டணம் செலுத்த ரெடியாக உள்ளனர். இது தொடர்பாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியிடம் பேசி இறுதி முடிவு எடுப்போம். பெண்கள் இப்படிச் சொல்வதைக் கருத்தில் கொண்டே ஆலோசிக்கிறோம். அதேநேரம் எந்தவொரு முடிவும் இதில் நாங்கள் எடுக்கவில்லை” என்றார். எனவே இந்த திட்டத்தை நாங்கள் இருக்கும் வரை நடைமுறையில் இருக்கும் என்றார்.