Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதன் முதலில் பெண்களே வெற்றியை தீர்மானிக்கும் தேர்தல்! இன்று வாக்கு எண்ணிக்கை வெற்றி யாருக்கு வேலூரில்?

வேலூர் தேர்தல் ஆகஸ்ட் 5 நடைபெற்றது. மொத்தம் 28 உறுப்பினர்கள் தேர்தலின் போட்டியிட்டனர். இத்தேர்தல் தமிழகத்தின் பெரும் இரு அரசியல் கட்சிகள் அதிமுக மற்றும் திமுகவிற்கு கடும் போட்டி ஏற்பட்டது. ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து பிரச்சாரம் முடிந்து தொகுதியில் ஆகஸ்ட் 5 இல் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். 71.51 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 9 இன்றைக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 14,32,555 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 7,01,351, வாக்காளர்களும், பெண்கள் 7,31,099, வாக்காளர்களும் மூன்றாம் பாலினத்தவர் 105 பேர் என உள்ளன.

இத்தேர்தலில் மொத்தம் 10,24,352 பேர் வாக்களித்துள்ளனர். இது 71.51 சதவீத மக்கள் வாக்களித்தனர். இதில் அதிகபட்சமாக பெண்கள் 5,21,452 வாக்காளர்களும், ஆண்கள் 5,02,861 வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 39 பேரும் வாக்களித்துள்ளனர்.

பெண் வாக்காளர்கள் 18,591 ஆண் வாக்காளர்களை விட பெண் ஓட்டுகள் கூடுதலாக வாக்களித்தனர். இதனால் பெண் வாக்காளர்களின் ஓட்டுகளே வெற்றியை தீர்மானிக்கும் என முழுமையாக நம்பப்படுகிறது.

வேலூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தமுள்ள 2,45,055 வாக்காளர்களில் 1,63,337 பேரும் (66.65 சதவீதம்), வாக்களித்தனர்.

அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் 2,39,045 வாக்காளர்களில் 1,78,723 பேரும் (74.77 சதவீதம்), வாக்களித்தனர்.

கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதியில் 2,14,826 வாக்காளர்களில் 1,62,413 பேரும் (75.60 சதவீதம்),வாக்களித்தனர்.

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் 2,71,855 வாக்காளர்களில் 1,87,743 பேரும் (69.06 சதவீதம்), வாக்களித்தனர்.

வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் 2,36,911 வாக்காளர்களில் 1,73,545 பேரும் (73.25 சதவீதம்), வாக்களித்தனர்.

ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் 2,24,863 வாக்காளர்களில் 1,58,591 பேரும் (70.53 சதவீதம்) வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வாக்குகள் இன்று வெள்ளிக்கிழமை எண்ணப்படும் இன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. மொத்தம் 21 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதை எல்லாம் பார்க்கும் போது பெண் வாக்காளர்களே உறுப்பினர்களின் வெற்றியை தீர்மானிக்கிறார்கள் என்பது நிதர்சன உண்மை.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Exit mobile version