‘பேசாதே… திரும்பி போ’ அதிமுக வேட்பாளரை பேசவிடாமல் துரத்தியடித்த பெண்கள்… பகீர் வீடியோ…!

0
102
ADMK

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால் அரசியல் கட்சி அலுவலகங்கள் அனைத்தும் திருவிழா கோலம் பூண்டுள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை வெளியீடு ஆகியன எல்லாம் முடிவடைந்து, தற்போது களத்தில் இறங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். வேட்பாளர்கள் பலரும் தங்களுடைய தொகுதியில் ஆதரவாளர்களுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADMK

அதிமுக தேர்தல் அறிக்கையின் படி வீடு இல்லாதவர்களுக்கு அம்மா இல்லம் திட்டம் , குடும்பத் தலைவிகள் ஒவ்வொருவருக்கும் மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும், ஆண்டிற்கு 6 சிலிண்டர்கள் இலவசம், இலவச வாஷிங்மெஷின் என எக்கச்சக்க கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் வேட்பாளர்கள் அதைக்கூறியே வாக்காளர்களிடம் ஓட்டு வேட்டை நடத்திவருகின்றனர். ஆனால் பல இடங்களில் கோரிக்கைகளை நிறைவேற்றாத எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

தற்போது அரக்கோணம் தனி தொகுதியைப் பொறுத்தவரை அதிமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ.வும், ராணிப்பேட்டை அதிமுக மாவட்ட செயலாளருமான சு.ரவி போட்டியிடுகிறார். வாக்கு சேகரிப்பிற்காக கைனூர் கிராமத்தில் ஆட்டோவில் சென்ற சு.ரவிக்கு அந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘பேசாதே, திரும்பி போ’ என அவர் வாகனத்தின் முன்பு நின்று பெண்கள் முழக்கமிட்டனர். இதனால் அவர் அப்பகுதியில் பிரச்சாரம் செய்யாமலேயே திரும்பிச்சென்றார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.