Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அற்புதம் தரும் நெல்லி மரம்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!

அற்புதம் தரும் நெல்லி மரம்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!

நெல்லி உயரமான இலையுதிர் மரம் ஆகும். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாக பயன்படுத்தப்படுகிறது.

மேலும் ஒவ்வொரு காம்பிலும் இருபுறங்களிலும் பச்சை வண்ணத்தில் இலைகள் அமைந்திருக்கும். இலைக் காம்பை ஒட்டியே சின்னஞ்சிறு வெள்ளை நிறப்பூக்கள் அரும்பும். வேனில் காலத் துவக்கத்தில் பூ ஆரம்பித்து வேனில் காலம் முடிவதற்குள் கனி விட தொடங்கி விடுகிறது.

மற்றொன்று தோப்பு அல்லது காட்டு நெல்லிக்காய் எனும் பெரிய அளவிலான பச்சை நெல்லிக்காய் ஆகும். இது மலைகளில் நன்றாக விளையும். மற்றைய நிலங்களில் சுமாராக விளையும். தென்னிந்தியாவில் அதிகமாக கிடைக்கும்.

இவை இலையுதிர் மர வகையைச் சேர்ந்தது. இதன் இலைகள் நீண்டும், அகலம் குறைவாகவும், இளம் மஞ்சள் நிறக் காய்களை உடைய மரமாகவும் இருக்கும். இதன் காய் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவைகளை ஒருங்கே பெற்றது.

நெல்லிக்காய் அறுசுவையையும் தன்னுள் கொண்டது. நெல்லிக்காய் சாப்பிட்டு விட்டு கடையிசில் தண்ணீர் குடிக்கும்போது இனிக்கும்.

நெல்லிக்காய் சாப்பிடுவதால் இரத்தத்தின் ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது. மேலும் நெல்லிக்காய் அடிக்கடி உண்டு வந்தால் என்றும் இளமையாக இருக்கலாம்.

நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது குறையும்.

நெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகிவிடும்.

வீட்டில் நெல்லிக்காய் மரம் இருந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிக்காய் மரம் திகழ்வதால் நெல்லிக்காய் மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி மரம்.

அறுசுவைகளும் சேர்ந்திருக்கும் இந்த நெல்லிக்காய் மரத்தினை, நம் வீட்டில் வளர்த்து வருவதன் மூலம் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். குறிப்பாக பெரிய நெல்லிக்காய்களை பைரவருக்கு வைத்து, பூஜை செய்து மற்றவர்களுக்கு தானமாக கொடுப்பது மிகவும் சிறப்பு.

வளர்க்க வேண்டிய இடம்:நெல்லிக்காய் மரத்தை வீட்டில் வளர்ப்பது மிகவும் நல்லது. இதற்கு காரணம் நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. இதனால் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

மேலும் நெல்லிக்காய் மரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுக முடியாது. நெல்லி மரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.

வீட்டில் பாத்திரங்களை கழுவும் நீர் செல்லும் பாதையில் நெல்லிக்காய் மரத்தை வளர்க்கலாம்.

நெல்லிக்காய் மரம் வீட்டின் தோட்டத்தில் வளர்க்க உகந்த மரமாகும்.

இந்த திசையில் வளர்க்கலாம்வீட்டின் வடகிழக்கு திசையில் நெல்லிக்காய் மரத்தை வளர்க்கலாம்.

 

Exit mobile version