Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Kanavu Palangal in Tamil : இந்த மாதிரி பொருட்கள் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன்

Kanavu Palangal in Tamil : இந்த மாதிரி பொருட்கள் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன்

சந்தனம்:

சந்தனத்தை கனவில் கண்டால் உயர்ந்த அளவில் புகழும், சிறப்பும் பெறுவதற்கான வாய்ப்பு இருந்தும் அதை பயன்படுத்தி கொள்ளாமல் இருக்கிறீர்கள், இனியாவது அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு முன்னேறுங்கள். வெற்றி நிச்சயம் என்பதைக் நமக்கு உணர்த்துகின்றது.

சகோதரர்:

சகோதரர் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு பொருளாதார நெருக்கடி குறையும் என்பதைக் குறிக்கும்.

சவ்வாது:

சவ்வாது பூசிக்கொள்வது போல் கனவு வந்தால், உங்களிடம் ஒரு பெண் நட்பாகப் பழகுவதைக் காதல் என்று தவறாய் நினைத்துக் கொண்டு உள்ளனர். அந்த எண்ணத்தை உடனே திருத்திக்கொண்டு அந்த பெண்ணுடன் நட்பாக பழகுங்கள். இல்லையென்றால் வீண் மனச்சங்கடங்கள் வந்துசெல்லும் என்பதுதான்.

சதை:

சதைத்திரள் ஒட்டியதாக உள்ள எலும்பைக் கனவில் கண்டால் விரைவில் அவர் செல்வந்தராகக் மாற வாய்புகள் உள்ளது என்பதைக் குறிக்கின்றது.

Exit mobile version