மீண்டும் ஊரடங்கா? ஆட்சியர்களுக்கு ஆணையிட்ட சுகாதாரத்துறை செயலாளர்!

0
221
Won't it be rough again? Health Secretary orders collectors

மீண்டும் ஊரடங்கா? ஆட்சியர்களுக்கு ஆணையிட்ட சுகாதாரத்துறை செயலாளர்!

கொரோனா தொற்றானது தொடர்ந்து தற்போது வரை முடிவில்லாமல் அனைத்து நாடுகளுக்கும் பெரும் பாதிப்பை அளித்து வருகிறது.அதிலிருந்து மீண்டு வரும்போதெல்லாம் வேறோரு பரிணாம வளர்ச்சி அடைந்துவிடுகிறது.இதனால் அனைத்து நாடுகளும் பொருளாதார ரீதியாக பின்னோக்கி உள்ளனர்.இந்த தொற்றால் இலங்கை பெருமளவு பொருளாதார வீழ்ச்சியடைந்துள்ளது.அங்கு தினந்தோறும் போரட்டக் கலவரமாகவே உள்ளது.தற்போது தான் மூன்றாவது அலை முடிந்து மக்கள் தங்களின் நடைமுறை வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது தான் பள்ளி கல்லூரி என அனைத்திலும் நேரடி வகுப்புக்கள் எடுக்கப்பட்டு வருகிறது.அதுமட்டுமின்றி இந்த ஆண்டு பொதுத்தேர்வும் நடக்க உள்ளது.தற்போது எக்ஸ்இ வைரஸ் புதிதாக பரவி வருவதாக  கூறி வருகின்றனர்.இந்த தொற்றானது குஜாரத்தை சேர்ந்த ஒருவருக்கு உள்ளதாக சோதனையில் தெரியவந்தது.மேலும் டெல்லி,உத்திரபிரதேசம்,மாராட்டியம் உள்ள மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்றானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் 25 க்கும் கீழ் இருந்த பாதிப்பு கடந்த சில நாட்களாக 30 –ஐ கடந்துள்ளது.இதனால் சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்டத் ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தற்போது கொரோனா தோற்று அதிகரித்து வருவதால் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைளை தீவீரமாக்க வேண்டும் என கூறியுள்ளார்.அதுமட்டுமின்றி தொற்று பாதிப்பு குறைந்து விட்டது என எண்ணி மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூடுவது சகஜமாகிவிட்டது.இதனால் தான் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.அதனால் தீவீரமான கட்டுப்பாடுகளை அமல்படுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்அதேபோல மக்கள் அனைவரும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.முன்பைப்போல மக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் மட்டுமே தொற்று பாதிப்பு குறையும்.