Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொதுப்பணித்துறையில் வேலை! 760 காலிப் பணியிடங்கள்!

Work in public works! 760 vacancies!

Work in public works! 760 vacancies!

தமிழக அரசின் சார்பில் பல வேலைக்கான காலிப் பணியிடங்களை வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றன. இதன் வரிசையில், தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் 760 பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப ஒரு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பணிக்குத் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள், அவர்களின் கல்வித் தகுதி, வயது வரம்பு குறித்து இங்கு விரிவாகப் பார்ப்போம்.

தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் டெக்னீசியன்(டிப்ளமோ அப்ரண்டீஸ்), பட்டதாரி பயிற்சிப் பணியிடங்கள், இன்ஜினியரிங் அல்லாத பட்டப்படிப்புப் பதவிகள் ஆகிய பணிகள் வெளியாகி உள்ளன. இதில் பட்டதாரி பயிற்சி பணியிடங்களுக்கு – 500, டெக்னீசியனுக்கு(டிப்ளமோ அப்ரண்டீஸ்) – 160, இன்ஜினியரிங் அல்லாத பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு – 100 காலிப் பணியிடங்கள் உள்ளதாகக் கூறப்படுகின்றது.

டெக்னீசியன் அப்ரண்டீஸ் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், டிப்ளமோ அல்லது அந்தத் துறை சார்ந்த பிரிவில் டெக்னாலஜி படிப்பை முடித்திருப்பது அவசியமாகும். இன்ஜினியரிங் பட்டதாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள், அந்தத் துறை சார்ந்த பிரிவில் இன்ஜினியரிங் அல்லது அதற்கு நிகரான டெக்னாலஜி படிப்பை முடித்திருக்க வேண்டும். இன்ஜினியரிங் அல்லாத பட்டதாரிகள் விண்ணப்பிக்க, பிஎஸ்சி/ பிஏ/ பிபிஏ/ பிகாம்/ பிசிஏ ஆகிய கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் பாடப்பிரிவை எடுத்து இருக்க வேண்டும். இது குறித்த முழு விவரங்களைத் தேர்வர்கள் தங்கள் தேர்வு அறிவிப்பில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

இந்தக் காலிப் பணியிடங்கள் முற்றிலும் ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் தேர்வு செய்யப்படும்.
1)பட்டதாரிப் பயிற்சிப் பணிக்குத் தேர்வானவர்களுக்கு மாதம் – ரூ. 9000
2)டெக்னீசியன்(டிப்ளமோ அப்ரண்டீஸ்) – ரூ. 8000
3)இன்ஜினியரிங் அல்லாத பட்டதாரிப் பணியிடங்கள் – ரூ. 9000

இந்தப் பணியிடங்கள் மெரிட் லிஸ்ட் மற்றும் சர்டிபிகேட் வெரிஃபிகேஷனின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும். விண்ணப்பிக்க, நவம்பர் 25, 2024 முதல் தொடங்கின. விண்ணப்பிக்கக் கடைசி நாள் டிசம்பர் 31, 2024 ஆகும்.

மெரிட் லிஸ்ட் ஆனது ஜனவரி 8, 2025 அன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்டிபிகேட் வெரிஃபிகேஷன் சென்னையில் ஜனவரி 21, 2025 முதல் ஜனவரி 24, 2025 வரை நடைபெறும். இதில் 1 வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பதற்கு முன் தேர்வு அறிவிப்பினை நன்கு படித்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். மேலும் விவரங்களுக்கு “http://boat-srp.com/wp-content/uploads/2024/11/PWD_Notification_24.pdf” இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Exit mobile version