Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கசாப்பு கடையில் வேலை செய்தவர்!! பெண்ணை 50 துண்டுகளாக வெட்டி கொலை!!

Worked in a butcher shop!! Cut the woman into 50 pieces and killed her!!

Worked in a butcher shop!! Cut the woman into 50 pieces and killed her!!

ஜார்க்கண்டில்: திருமணம் செய்யாமல் லிவ்-இன்’ உறவில் இருந்த இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் 50 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் ஜார்க்கண்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குந்தி மாவட்டத்தின் ஜோர்டாக் கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ் பெங்ரா (வயது25). இவர் 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஒரு கசாப்பு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் அவரது சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலத்துக்கு திரும்பி உள்ளார். ஆனால் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் மேலும் அப்பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பெண்ணுடன்  தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

இதற்கிடையே இவருக்கு திருமணம் ஆனதை மறைத்து அந்த பெண்ணுடன் தனியாக குடுத்தனம் நடந்துள்ளார். அந்த பெண் கடந்த  8-ம் தேதி தன்னை திருமணம் செய்து கொள்ளுமார் கேட்டுள்ளார். இதனால் அவர் ஆத்திரம் அடைந்தது தனது வீட்டிற்கு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். முதலில் அந்த பெண்ணை கழுத்தை நெரித்து மயக்கம் அடைய செய்தது அவரை கற்பழித்தார். பின்பு  நரேஷ்  கொண்டு சென்ற கூர்மையான ஆயுதங்கள் தாக்கி உடலை  சேதப்படுத்தினார். பின் அந்த பெண்ணை கொலை செய்தது 50 துண்டுகளாக்கி காட்டில் விலங்குகளுக்கு இரையாக்கினர்.

ஆனால் காட்டில் இருந்த உடல் துண்டுகளை நாய்கள் ஊருக்குள் கொண்டு சென்று போட்டு உள்ளது. அதனைப் பார்த்து பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அங்கு விரைந்து போலீசார் பெண்ணின்  உடல் துண்டுகளை சேகரித்து விசாரணை நடத்தினார். மேலும் சம்பவ இடத்தில் ஆதார் அட்டைகள் உள்ளிட்டு பொருட்கள் அடங்கிய ஒரு பைக் இருந்தது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பெண்தான் என அவர் தாயாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது. நரேஷ் பெங்ரா கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version