வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை!! வீடியோ பரப்பிய பாஜக செய்தி தொடர்பாளர் ஆஜர்!!
வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என சமூக வளைதளங்களில் பரவிய வீடியோக்களை பார்வர்டு செய்ததாக போலீசாரால் தேடப்பட்டு வந்த பாஜக செய்தி தொடர்பாளரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான பிரசாந்த் குமார் உம்ரோ தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் விசாரணை-க்கு ஆஜார்.
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், அதைபோல் வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுக்காப்பு இல்லை எனவும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவியது.
இதனை அனைத்து சமூக வளைதளங்களிலும் பார்வர்டு செய்ததாக உத்ர பிரதேஸ் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் குமார் உம்ரோ என்ற பாரதிய ஜனதா கடசியின் செய்தி தொடர்பாளரும் டெல்லி உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞருமான பிரசாந்த் குமார் உம்ரோ என்பவரை போலீசார் வழக்கு பதிவு செய்து.
அவரை தேடிய நிலையில் அவர் சுப்ரீம் கோர்டில் தன்னை கைது செய்ய கூடாது என முன் ஜாமின் பெற்றிருந்தார்.
இந்நிலையில் பிரசாந்த் குமார் உம்ரோவை போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் இன்று பிரசாந்த் குமார் உம்ரோ விசாரணை-க்கு ஆஜராகினார்.
அவரை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் டி எஸ்பி வசந்தராஜ்,மற்றும் மத்தியபாகம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஐய்யப்பன் ஆகியோ விசாரணை செய்து வருகின்றனர்.