நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து உலக வங்கி கணித்த புள்ளி விவரங்கள்!
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 8.3 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தற்போது கணித்துள்ளது. அரசு முதலீடு அதிகரிப்பு, உற்பத்தியை அதிகரிக்க சலுகை உள்ளிட்ட பல காரணங்களால் இத்தகைய வளர்ச்சி விகிதங்கள் சாத்தியமாகும் என்றும், உலக வங்கி அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
ஜூன் மாதம் வரையிலான வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த நிதியாண்டில் 2021-2023 வளர்ச்சி விகிதம் 8.3 சதவீதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தெற்காசியாவில் மட்டும் 2020 – 2023ம் ஆண்டு வரை வளர்ச்சி விகிதம் 3 சதவிகிதமாக இருக்கும் என்றும் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் வங்காளதேசத்தில் இந்த நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 6.4 சதவிகிதம் ஆகவும், மாலத்தீவுகளின் ஜிடிபி 22.3 சதவீதமாக இருக்கும் எனவும் உலக வங்கி கணித்துள்ளது