வேர்ல்டு விஷன் இந்தியா சார்பாக உலக தாய்ப்பால் வார விழா!
தேனி மாவட்டம் மயிலாடும்பாறையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், பொது சுகாதாரத் துறை, வருவாய்த்துறை மற்றும் வேர்ல்டு விஷன் இந்தியா இணைந்து நடத்திய உலக தாய்ப்பால் வார விழா இன்று மயிலாடும்பாறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இந்த விழாவில், திருமதி. செல்வி சித்ரா, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வரவேற்பு நிகழ்த்தினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி. இராஜராஜேஸ்வரி தலைமை தாங்கி சிறப்புரையாற்றி, குழந்தைகள் வளர்ப்பு குறித்த வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
திரு. ஜெசுகரன் தங்கராஜ், திட்ட மேலாளர், வேர்ல்டு விஷன் இந்தியா தாய்ப்பாலின் அவசியம் மற்றும் குழந்தைகளின் முழுமையான வளர்ச்சி மற்றும் நல்ல பெற்றோராக வாழ்ந்து குழந்தை நேய சமுதாயம் அமைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். திரு. திருப்பதி முத்து, வட்டார வளர்ச்சி அலுவலர், திருமதி.பார்வதி அன்பில்சுந்தர பாரதம், மயிலாடும்பாறை ஊராட்சி மன்றத் தலைவர், சதீஷ் குமார், போஷன் அபியான் ஒருங்கிணைப்பாளர், செவிலியர் கவுசல்யா உள்ளிட்டோர் தாய்ப்பாலின் சிறப்பை எடுத்துரைத்தனர். திருமதி. ஜெயலட்சுமி, மேற்பார்வையாளர், ஒகுவதி, நன்றி கூறினார்.
இந்த விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள், தாய்மார்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.இந்த விழாவினை, வேர்ல்டு விஷன் இந்தியா ஒருங்கிணைப்பாளர் சுதா செபாஸ்டி தொகுத்து வழங்கினார். திருமதி. ஜோதி மணி, ராஜூ ஜாண், ராஜபாண்டி, ஜெயசேகர் அன்பையா, யோவான், ஜெயசீலன், பொன் அலெக்ஸ் மற்றும் தன்னார்வலர்கள் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.