Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

35.89 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!

உலகம் முழுவதும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில்,சற்றுமுன் வெளியான தகவலின்படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35.89 கோடியாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் 358,984,694 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 5,633,311 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து 284,494,358 பேர் மீண்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போது உலகம் முழுவதும் 68,857,025 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன.

அமெரிக்காவில், கொரானாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 73,432,778 ஆக உள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 8,94904 ஆக உள்ளது. குணமடைந்தவரின் எண்ணிக்கை 21,926,277 ஆக உள்ளது.

Exit mobile version