Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கடலில் மூழ்கிய உலகப்புகழ்பெற்ற மிதக்கும் உணவகம்!

ஹாங்காங்கில் இருந்த ஜம்போ மிதக்கும் உணவகம் அந்த நாட்டின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் இருந்து வந்தது. ராணி எலிசபெத், ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ், உள்ளிட்ட உலகப் பிரபலங்கள் உணவருந்திய உணவகம் இது என்று சொல்லப்படுகிறது.

பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் இந்த மிதக்கும் உணவகம் இடம்பெற்றிருந்தது, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமாக திகழ்ந்த இந்த ஜம்போ மிதக்கும் உணவகம் நோய் தொற்றால் பெரும் நஷ்டத்தை சந்தித்தது.

நோய்தொற்று பொது முடக்கம் காரணமாக, கடந்த 2020ஆம் ஆண்டு ஜம்போ மிதக்கும் உணவகம் மூடப்பட்டு அதில் பணியாற்றி வந்த அனைத்து பணியாளர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

அது ஒரு உணவகத்தை பராமரிப்பதற்கு ஆகும் செலவை சமாளிக்க முடியாததால் மிதக்கும் உணவகம் கடந்த 14ம் தேதி ஹாங்காங்கிலிருந்து புறப்பட்டது. இந்த சூழ்நிலையில், தென் சீனக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது கப்பல் மூழ்கி விட்டதாக அதன் உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தண்ணீர் உள்ளே நுழைய ஆரம்பித்தவுடன் கப்பலை மீட்பதற்கு மிகப்பெரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது எனவும், ஆனாலும் கடைசியில் மீட்கும் முயற்சி தோல்வியை சந்தித்தது என்றும், அந்த நிறுவனம் கவலை தெரிவித்திருக்கிறது.

Exit mobile version