ஒமைக்ரான் வைரசால் உருவாகும் அடுத்த ஆபத்து – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

0
123
World Health Organization
ஒமைக்ரான் வைரசால் உருவாகும் அடுத்த ஆபத்து – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
தற்போது பரவி வரும் உருமாறிய ஒமைக்ரான் வைரசால் மேலும் ஒரு புதிய வேறுபாட்டை உருவாக்க முடியும் அதற்கான வாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ளதாக ஐரோப்பாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸானது பல பிரிவுகளாக உருமாற்றம் அடைந்து தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் புதிதாக உருவாகி, பல நாடுகளில் தொடர்ந்து பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவின் அடுத்த உருமாறிய ஒமைக்ரான் வைரஸ், ஆரம்பத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்பட்டது. ஆனால், ஒமைக்ரான் வைரஸ் பரவும் வேகம் அதிகமாக இருந்தாலும், டெல்டாவை விட இந்த வைரஸானது குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும் என தகவல்கள் வெளியானது.
World Health Organization
World Health Organization
இந்த நிலையில் தான் ஒமைக்ரான் வைரஸ் அடுத்ததாக ஒரு உருமாறிய புதிய வைரசை உருவாக்கக்கூடும் என்று ஐரோப்பாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி கேத்தரின் ஸ்மால்வுட் தெரிவித்துள்ளதாவது,
தற்போது பரவி வரும் உருமாறிய ஒமைக்ரான், அதிகம் பரவும் தன்மையை கொண்டதாக உள்ளது. ஆனால் அதன் பாதிப்பு தன்மை டெல்டாவை விட குறைவாகவே உள்ளது. ஆனால் ஒமைக்ரான் வைரஸ் மேலும் ஒரு புதிய மாறுபாட்டினை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ளது. அந்த புதிய மாறுபாட்டை கொண்ட வைரஸ் மிகவும் ஆபத்தானதாகவும், அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.