Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உலக பாரம்பரிய வாரம் – இன்று ஒருநாள் மட்டும் மாமல்லபுரம் புராதன சின்னங்களை கட்டணமின்றி பார்வையிட அனுமதி 

World Heritage Week - Today only one day free visit to Mamallapuram ancient monuments

World Heritage Week - Today only one day free visit to Mamallapuram ancient monuments

உலக பாரம்பரிய வாரம் – இன்று ஒருநாள் மட்டும் மாமல்லபுரம் புராதன சின்னங்களை கட்டணமின்றி பார்வையிட அனுமதி

நவம்பர் 19 ஆம் தேதி இன்று முதல் 25 ஆம் தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இன்று ஒருநாள் மட்டும் மாமல்லபுரத்தில் உள்ள பாரம்பரிய சிற்பங்களை கட்டணமின்றி பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னமான கடற்கரை கோவில், கலங்கரை விளக்கம், 5 ரதம் உள்ளிட்ட பாரம்பரிய சிற்பங்களை பார்வையிட பார்வையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆனால் உலக பாரம்பரிய வாரத்தையொட்டி இன்று ஒருநாள் மட்டும் இந்த புராதனச் சின்னங்களை இலவசமாக பார்க்க அனுமதித்து தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது.

இதேபோல், மதுரை திருமலை நாயக்கர் மஹாலை ஒரு வார காலம் கட்டணமின்றி பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version