Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உலக பட்டினி தினம் 2023! தமிழ்நாடு மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உணவு அளிக்கப்பட்டது!!

#image_title

உலக பட்டினி தினம் 2023! தமிழ்நாடு மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உணவு அளிக்கப்பட்டது!
இன்று உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுவதை அடுத்து தமிழகம் முழுவதும் அதாவது 234 தொகுதிகளிலும் உள்ள ஏழை ஏளிய மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒரு வேளை உணவு அளிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் மே 28ம் தேதி வருடந்தோறும் உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகின்றது. உலகம் முழுவதிலும் பட்டினியால் நீண்ட நாட்கள் அவதிப்படும் அதாவது நீண்டநாட்கள் உணவில்லாமல் வாழும் மக்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக பட்டினி தினம் வருடந்தோறும் மே 29ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இதையடுத்து நடிகர் விஜய் அவர்களின் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று ஒரு வேளை மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நடிகர் விஜய் அவர்களின் உத்தரவுப்படி செயல் படுத்தப்பட்டுள்ளது.
பசி எனும் பிணி போக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடிகர் விஜய் அவர்கள் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் என்ற திட்டம் மூலமாக இன்று அதாவது மே 28ம் தேதி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம்,  ஒன்றியம் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு நாள் மதிய உணவு வழங்க ஏற்பாடும் செய்யப்பட்டது.
இதையடுத்து விஜய் மக்கள் இயக்கம் அனைத்து மக்களுக்கும் உணவை வழங்கியது. பல இடங்களில் வழங்கப்பட்ட இந்த மதிய உணவை மக்கள் பலரும் வாங்கி பயன் அடைந்தனர்.
Exit mobile version