Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று உலக பார்வை தினம்! தங்களுடைய கண்களை மெருகேற்றுவதற்கான 3 உடற்பயிற்சிகள் இதோ!

கண் நலன் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டதோறும் அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி உலக பார்வை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள் உலக கண் தினம் அல்லது உலக பார்வை தினம் எனவும் அழைக்கப்படுகிறது.

கண்கள் நம்முடைய உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும் அதோடு பார்வை என்பது இயற்கையால் நமக்கு கிடைத்த மாபெரும் பரிசு. இந்த அழகான உலகத்தை நாம் கண்களால் தான் பார்க்கிறோம். ஆனால் உலக அளவில் 2.2 பில்லியன் மக்களுக்கு அருகில் அல்லது தொலைதூரத்தில் இருப்பது சரிவர தெரியாத வகையில் பார்வை குறைபாடு இருக்கிறது என்பது தங்களுக்கு தெரியுமா?

குறைந்தபட்சம் எத்தனை பேரின் பிரச்சனையில் பாதியாவது சரியான சமயத்தில் தீர்க்கப்பட்டு இருந்தால் அவர்களுடைய பார்வை மீட்க பட்டு இருக்கும்.

மடிக்கணினி தொலைபேசி தொலைக்காட்சி என்று எல்லாவற்றையும் பார்ப்பதாலும் நம்முடைய கண்கள் கஷ்டப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்படுவது மட்டுமல்லாமல், விழிப்புணர்வு இல்லாததால் நம்முடைய கண்களுக்கு சரியான ஓய்வும் கொடுக்கப்படுவதில்லை. ஆகவே கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இந்த பயிற்சிகளை தவறாமல் செய்து எப்போதும் ஆரோக்கியமான கண் பார்வையுடன் திகழுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு முதுகை நிமிர்த்தி உடலை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பேனாவை எடுத்து ஒரு கண்ணை மூடிக்கொண்டு பேனாவை உங்கள் கண் விழி உயரத்துக்கு கொண்டு சென்று அதன் முனையில் கவனம் செலுத்துங்கள்.

அடுத்ததாக பேனாவை அதன் அருகில் மற்றும் வெகு தொலைவில் நகர்த்துங்கள். தற்போது இந்த கண்ணை மூடிக்கொண்டு மற்றொரு கண்ணிலும் அவ்வாறே செய்யுங்கள் ஒவ்வொரு கண்ணிலும் இதுபோல 5 சுற்றுகள் செய்ய வேண்டும். இந்த கண் பயிற்சி தங்களுடைய கவனம் செலுத்தும் திறன் மற்றும் கண்களில் இருக்கின்ற தசைகள் உள்ளிட்டவற்றை சீர்படுத்துகிறது.

இந்த வகை உடற்பயிற்சிக்கு இரண்டு பேர் எதிரெதிரே நிறுத்த வேண்டும் ஒரு நடுத்தர அளவிலான பந்தை எடுத்து எதிரே இருப்பவர் மீது எரிந்து அந்த நபர் அதனை பிடித்தவுடன் நீங்கள் பந்தை பார்த்து கண் சிமிட்ட வேண்டும்.

அந்த நபர் தங்களிடம் பந்தை எறிந்தால் மறுபடியும் கண் சிமிட்டவும்.

இந்த உடற்பயிற்சி கண்ணில் இருக்கின்ற தசைகளை வலுவடைய செய்கிறது இது கண்ணின் உள்ளே இருக்கின்ற லென்ஸின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.

சூரிய கதிர்கள் விழும் இடத்தில் தங்களுடைய கால்களை பாதி தூரம் தள்ளி வைத்து நிற்க வேண்டும். கண்களை மூடிக்கொண்டு சூரியனை எதிர்கொள்ளுங்கள். தங்களுடைய கண்கள் தளர்வாக இருப்பதையும், இறுக்கமாக மூடாமல் இருப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

இப்போது தங்களுடைய தலையை இடமிருந்து வலமாக மெதுவாக திருப்புங்கள், கதிர்கள் கண்ணில் விழுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். நாள்தோறும் இரண்டு நிமிடங்களுக்கு அதிகாலையில் இதை பயிற்சி செய்யுங்கள் இந்த உடற்பயிற்சி தங்களுடைய விழித்திரையை உணர்ச்சி மண்டலங்களை தூண்டுகிறது.

Exit mobile version