புதுச்சேரியில் தை மாதம் நடக்கவிருக்கும் உலக தமிழ் மாநாடு!!

0
99
#image_title

புதுச்சேரியில் தை மாதம் நடக்கவிருக்கும் உலக தமிழ் மாநாடு!!

வரும் தை மாதம் உலகத்தமிழ் மாநாட்டை நடத்த புதுச்சேரி அரசு முடிவெடுத்துள்ளது.இதனைக்குறித்து புதுச்சேரி முதலமைச்சர்  ரங்கசாமி கூறியதாவது.

முதல்வர் அறிக்கை:

புதுச்சேரியில் உலகத்தமிழ் மாநாடு நடத்தபோவதாக கடந்தாண்டு பட்ஜெட் தாக்கல் தொடரில் முதல்வர் ரங்கசாமி கூறினார்.இதனைத்தொடர்ந்து உலகத்தமிழ் மாநாட்டிற்கான  மற்ற கலை கலாசாரத்துறை ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருப்பதாகவும் கூறினார்.

என்னதான் தனி பிரதேசமாகயிருந்தாலும் தமிழ் வளர்ச்சியில் புதுவையரசிற்கு  அளப்பரிய அக்கரையிருப்பதாக அவர் கூறினார்.ஏற்கனவே உலகத்தமிழ் மாநாடு கடந்த 2010ம் ஆண்டு நடத்துள்ளது.அவற்றில் புதுவையைச் சேர்ந்த தமிழறிஞர்கள் பங்கேற்றுள்ளனர்.அதுபோல வெளிநாடுவாழ் தமிழறிஞர்களும் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

நடத்துமிடம்:

இம்மாநாட்டிற்கு தேவையான நிதியுதவிகள் அனைத்தும் புதுவையரசு ஒதுக்கியுள்ளதாகவும் கூறினார்.இம்மாநாடு 2 அல்லது 3 நாட்கள் நடத்தவிருப்பதாகவும், இம்மாநாட்டிற்கு எத்தனை பேர் வருவார்கள் என்றும் கணக்கெடுத்து அவர்களின் அடிப்படை தேவைகளை [பூர்த்தி செய்யவேண்டும்  எனவும் எடுத்துரைத்தார்.இம்மாநாட்டினை காமராசர் மணிமண்டபம்,கம்பன் கலையரங்கம்,,பழைய துறைமுகங்கள் போன்றவற்றில் நடத்தலாமெனவும்.இடபற்றாக்குறை ஏற்படின் திருமணமண்டபங்களை வாடகைக்கு எடுத்து கொள்ளலாமெனவும் கூறினார்.

நடத்தவிருக்கும் மாதம்:

இம்மாநாட்டை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் நடத்தவேண்டும் இல்லையெனில் தேர்தல் முடிந்தபிறகுதான் நடத்தமுடியுமென கூறினார்.இம்மநாடு வரும் தை,மாசி மாதங்களில் நடத்தப்படவுள்ளது.இம்மாநாட்டில் கரகம்,சிலம்பம்,புலியாட்டம்  போன்ற கலை நிகழ்ச்சிகள்  நடைபெறுமென்றும் கூறினார்.

இம்மாநாட்டிற்கு வெளிநாட்டிலிருக்கும் தமிழறிஞர்களுக்கும் அழைப்பு விடுக்ககோரினார்.இவ்வாறு புதுவை முதலமைச்சர் பேசினார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் இலட்சுமிநாராயணன்,சபாநாயகர் செல்வம்,செல்வகணபதி எம்..பி,பண்பாட்டுதுறை செயலாளர் நெடுஞ்செழியன்,இயக்குனர் கவிபெருமாள்,புதுவை தமிழ்ச்சங்க தலைவர் முத்து,கம்பன் கழக தலைவர் சிவக்கொழுந்து உள்ளிட்ட  அறிஞர்கள் கலந்து கொண்டனர்.