Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று “உலக திரையரங்கு” தினம்! உலகின் முதல் சினிமாவை யார் வெளியிட்டது.? 2020 பிளாக்பஸ்டர் திரெளபதி.!!

இன்று “உலக திரையரங்கு” தினம்! உலகின் முதல் சினிமாவை யார் வெளியிட்டது.? 2020 பிளாக்பஸ்டர் திரெளபதி.!!

ஒவ்வொரு வருடமும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்கு தினமாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திரைப்படங்கள் பிறந்து மக்கள் கையில் தவழும் முக்கிய இடமாக தியேட்டர்கள் திகழ்கின்றன.

யுனெஸ்கோவின் முயற்சியால் சர்வதேச திரையரங்க நிறுவனம் 1948 -ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. யுனெஸ்கோ மற்றும் அதன் கலாச்சாரத் துறையின் சார்பாக 1960 -ஆம் ஆண்டில் உலகத் திரையரங்கு தினம் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 ஆம் தேதி உலகத் தியேட்டர் தினம் சர்வதேச திரையரங்கு நிறுவனம் மூலம் கொண்டாடப்படுகிறது.

உலகில் அதிகளவில் திரைப்படங்களை தயாரிக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரிசா, வங்கம், இந்தி, மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்திய சினிமா திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தற்போது சினிமாத்துறையில் அதிகளவு படங்கள் தயாரிக்கப்பட்டு தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் போட்டியாக களமிறக்கப்பட்டு வருகின்றன.

உலகின் முதல் சினிமாவைத் தயாரித்து வெளியிட்டவர்கள் லூமியர் சகோதரர்கள். முதல் சினிமா 1895 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரீசில் உள்ள “ஈடன் சினிமாஸ்’ என்ற திரையரங்கில் வெளியிடப்பட்டது. இந்த படம் வெளியாகிய 6 மாதத்தில் லூமியர் சகோதரர்கள் இந்தியாவில் உள்ள பம்பாய் வாட்சன் ஓட்டலில் திரையிட்டுக் காட்டினர்.

இந்தியாவில் 1896 ஆம் ஆண்டு சினிமா திரைப்படம் வெளியிடப்பட்டது. இதன் தொடக்கத்தில் இருந்து 1913 ஆம் ஆண்டு வரை வெளிநாட்டு திரைப்படங்களே திரையிடப்பட்டன. இதன் பின்னரே இந்தியாவில் குறும்படங்களை தொடர்ந்து சினிமா திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டு வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

2020 ஆம் ஆண்டின் தமிழ் திரையுலகில் பிளாக்பஸ்டர் திரைப்படமாக “திரெளபதி” மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பு இந்திய சினிமாவில் வித்தியாசமான கூட்டுத் தயாரிப்பில் உருவான திரைப்படமாகும். இப்படத்தின் டிரெய்லர் வெளியானபோதே கிட்டத்தட்ட 50 லட்சம் பார்வையாளர்களைத் தாண்டி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. படம் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகி சக்கைபோடு போட்டனர்.

இப்படத்தை வாங்கி திரையிட்டவர்கள் முதலீடு செய்த பணத்தை விட 3 மடங்கு லாபத்தை ஈட்டியது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாகி சில சர்ச்சை விவாதங்கள் உருவாகியபோது திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி பல்வேறு உண்மை சம்பவங்களை ஆதாரத்தின் அடிப்படையில் கூறி பல்வேறு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த ஆண்டு பல்வேறு தமிழ்ப் படங்கள் வெளியாகிய நிலையில் திரெளபதி படம் மட்டுமே 15 கோடி வசூலை வாரி குவித்துள்ளதால், 2020 ஆம் ஆண்டின் “பிளாக்பஸ்டர்” மூவியாக திரெளபதி கொண்டாடப்படுகிறது.

Exit mobile version