Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

#BREAKING உலகம் முழுவதும் முடங்கியது வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்…!

whatsapp

whatsapp

தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியன முடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் #whatsappdown #facebookdown ஆகிய ஹேஷ்டேக்குகளுடன் ட்விட்டரில் பதிவிட ஆரம்பித்துள்ளதால் இந்த ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகியுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெலிகிராம் சேவையும் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரே சமயத்தில் ஒட்டுமொத்த சோசியல் மீடியாவும் முடங்கியதால் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியாததால் பயனர்கள் அவதி அடைந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் வாட்ஸ் அப், முகநூல், டெலிகிராம் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் பலவற்றிலும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் திடீரென முடங்கியதால் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version