சீன விஞ்ஞானிகளின் முயற்சியால் குரங்கு-பன்றிக்கு பிறந்த வித்தியாசமான விலங்கு
சீன விஞ்ஞானிகளின் முயற்சியால் பன்றி மற்றும் குரங்குகளுக்கு இரண்டு வித்தியாசமான விலங்குகள் பிறந்துள்ளன.
பன்றி மற்றும் குரங்கின் டி.என்.ஏவை ஆய்வு செய்து இதுபோன்ற வித்தியாசமான விலங்கு ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியபோதிலும் இந்த இரண்டு விலங்குகளும் பிறந்து ஒரே வாரத்தில் இறந்துவிட்டன.
இருப்பினும் இந்த விலங்குகளின் இதயம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் மனிதனுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்ய பயன்படும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுபோன்ற விலங்குகளை செயற்கையாக உருவாக்குவதன் மூலம் மனிதனுக்கு தேவையான மாற்று அறுவை சிகிச்சைக்கான உறுப்புகளுக்கு தட்டுப்பாடு இருக்காது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்த ஆராய்ச்சி மேலும் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.