சேலத்தில் உலகிலே மிக உயரமான முருகர் சிலை:! கும்பாபிஷேக தேதி அறிவிப்பு!!

0
99

சேலத்தில் உலகிலே மிக உயரமான முருகர் சிலை:!கும்பாபிஷேக தேதி அறிவிப்பு!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திர கவுண்டம் பாளையத்தில் சுமார் 145 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் பணி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்றது.

இந்த சிலையானது மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை விட 5 அடி உயரம் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த சிலையானது திறக்கப்பட்டு,கும்பாபிஷேகம் நடத்தப்பட்டால் உலகிலேயே மிக உயரமான முருகர் சிலை இதுவாகும்.

கும்பாபிஷேக நாள் குறித்து கோயில் நிர்வாகி ஸ்ரீதர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,எனது தந்தை முத்து நடராஜன் கடந்த 2016 ஆம் ஆண்டு முருகர் சிலை அமைப்பதற்கான ஏற்பாட்டை துவங்கி வைத்தார்.இந்த சிலை வடிவமைக்கும் பணியானது திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதி தலைமையில் நடைபெற்றது.இவர் மலேசிய பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிலையானது கட்டி முடிக்கப்பட்டிருக்கும் நிலையில்,வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி முருகருக்கு கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதாக ஸ்ரீதர் கூறியுள்ளார்.