Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை27.74 கோடி என உயர்வு!

சீனாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட நோய்த்தொற்று பரவல் பின்பு படிப்படியாக உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதில் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா தற்போது முதலிடத்தில் இருக்கிறது, இதற்கு முன்பாக அமெரிக்கா முதலிடத்தில் இருந்தது தற்போது அது பின்தங்கி இந்தியா முதல் இடத்திற்கு வந்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தென்னாப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட புதிய வகை நோய் தொற்று மற்ற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய வகை நோய் தொற்று பரவும் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு இடையே தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, பிரிட்டன், இத்தாலி, போர்ச்சுக்கல் ,ஸ்காட்லாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ், நைஜீரியா, இந்தியா, ஐஸ்லாந்து, உள்ளிட்ட 106 நாடுகளில் இந்த புதிய வகை நோய் தொற்று பரவுகிறது. புதிய வகை நோய் தொற்று பரவிய நாடுகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இதற்கு நடுவே உலகம் முழுவதும் கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், பலியானோரின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

இந்த சூழ்நிலையில், தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் உலகம் முழுவதும் இந்த வைரஸ் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 27.74 கோடியை கடந்து இருக்கிறது. இதன் அடிப்படையில் உலகம் முழுவதும் தற்போது 27 கோடியே 74 லட்சத்து 93 ஆயிரத்து 670 பேருக்கு இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரையில் 24 கோடியே 85 லட்சத்து 89 ஆயிரத்து 703 பேர் குணமடைந்திருக்கிறார்கள். அதோடு வைரஸ் தாக்குதலுக்கு இதுவரையில் 53 லட்சத்து 92 ஆயிரத்து 780 பேர் பலியாகி இருக்கிறார்கள். இந்த தொற்று காரணமாக தற்போது 2 கோடியே 35 லட்சத்து 9 ஆயிரத்து 588 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பெற்று வருபவர்களில் 89 ஆயிரத்து 498 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

Exit mobile version