Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உலகளவில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரிப்பு! உலக நாடுகள் மகிழ்ச்சி!

சீனாவில் கடந்த 2019 ஆம் வருடம் நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது அந்த நோய்த்தொற்று தற்சமயம் உலகம் முழுவதும் சுமார் 220 மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்த நோயினால் அதிகமாக பாதிக்கப்பட்டது அமெரிக்காதான் அமெரிக்காவில் பல கோடி மக்கள் இந்த நோய்த்தொற்று பரவலால் பலியானார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் உலகத்தின் பல்வேறு சக்திவாய்ந்த வல்லரசு நாடுகளும் இந்த நோய் தொற்று நோய் பாதிக்கப்பட்டது இதன் காரணமாக, உலகளவில் பொருளாதாரம் மிகவும் மந்தமடைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியாவின் மிகப்பெரிய நாடான ஆசியாவின் துணைக்கண்டம் என்று போற்றப்படும் இந்தியாவிலும் கூட இந்த நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்தது.ஆனாலும் மத்திய அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக, இந்த நோய் தொற்று தற்போது மெல்ல, மெல்ல, குறைந்து வருகிறது.

இந்த நிலையில், உலகம் முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வந்தாலும் கூட இந்த நோய்த்தொற்று பரவல் ஒரு மாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகின்றது.

ஆகவே உலகம் முழுவதும் நோய் தொற்று நோய் பரவல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,37,65,178 என்று அதிகரித்திருக்கிறது. நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து இதுவரையில் 42,93,65,389பேர் இந்த நோய் தொற்றிலிருந்து நலம் பெற்றிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் மட்டும் ஒரே நாளில் 25,480 ஏழுக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதோடு ஒரேநாளில் 466 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

Exit mobile version